கணிதம் :: கணிதத் துறைகள்
21. இதை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குக.
54, 930 ஆகிய இரு எண்களை எடுத்துக் கொள்க. 930 ஐ 54 ஆல் வகுக்க ஈவு 17 மீதி 12, 54 ஐ 12 ஆல் வகு. ஈவு 4 மீதி 6. 12 ஐ 6 ஆல் வகு. ஈவு 2. மீதி 0. ஆக 54, 930 ஆகியவற்றின் மீப்பெருப் பொதுக் காரணி 6.
22. யூக்ளிட் சாரா வடிவியல் என்றால் என்ன?
யூக்ளிட்டின் இணை எடுகோள்கள் இல்லாத வடிவியல்.
23. இதன் வகைகள் யாவை?
நீள்வட்ட வடிவியல், அதிபரவளை வடிவியல்.
24. வடிவியலின் இன்றியமையாமை யாது?
கற்பவரின் சிந்திக்கும் ஆற்றலை வளர்ப்பது வடிவியல் கல்வி. கற்பவர் தக்க முறையில் சிந்தித்துப் பார்த்துப் படிப்படியாகக் காரணகாரிய அடிப்படையில் சரியான முடிவுக்கு வரும் ஆய்திறனை அளிப்பது. இதனால்தான் பழங்காலத்தில் மெய்யறிவு நூல் பயின்றோர் வடிவியல் கற்றனர்.
25. முக்கோண வடிவியல் என்றால் என்ன?
முக்கோணப் பக்க நீளங்கள், மற்றும் கோணங்கள் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தொடர்புகளை ஆராய்வது இது. இதன் மொழியாவது: சைன்கள், கோசைன்கள், தொடுகோடுகள் முதலியவை.
26. முக்கோண வடிவியலின் சிறப்பு யாது?
இது நில அளவையலாரின் அடிப்படைக் கருவி. புவி மேற்பரப்பை அளந்து அதன் உருவங்களை உறுதி செய்ய உதவுவது. வானப் போக்குவரத்திலும், கப்பல் போக்குவரத்திலும் இது முதன்மையான முறையுமாகும்.
27. முக்கோணவியலைப் பற்றி ஆராய்ந்தவர் யார்?
கிரேக்க அறிஞரான கிப்பாக்கஸ் (கி.மு.140) ஆராய்ந்தார். இவர் செங்கோண முக்கோணத்தில் சைன், கோசைன், டேன்ஜண்ட் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பக்கங்களுக்கும் கோணத்திற்குமிடையே உள்ள வீதத்தைக் கண்டறிந்தவர்.
28. முக்கோணவியல் பயன்படும் துறைகள் யாவை?
வானவியல், பொறியியல், கப்பல் போக்குவரத்து.
29. வானவெளிப் போக்குவரத்திற்குப் பயன்படும் முக்கோண வடிவ கணிதம் எது?
கோள முக்கோண வடிவ கணிதம்.
30. நுண்கணிதம் என்றால் என்ன?
இது ஒர் உயர்நிலைக் கணிதமாகும். இது வரையறை செய்யப்பட்ட தோராய முறைகளைப் பயன்படுத்துவது. இதைக் கொண்டு மாறிகளுக்கிடையே உள்ள சிக்கலான தொடர்களுக்குரிய தீர்வுகளைக் காணலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதத் துறைகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - வடிவியல், முக்கோண, உள்ள, என்றால், மீதி, என்ன