கணிதம் :: கணிதக் கருவிகள்
8. வடிவியல் பெட்டி என்றால் என்ன?
கணித வரை கருவிகள் அனைத்துமுள்ள பெட்டி. அளவுகோல், கோணமானி, கவராயம் மூலை மட்டம் முதலியவை இதில் இருக்கும். வகுப்பில் கணித ஆசிரியர் அதிகம் பயன்படுத்துவது.
9. கோண அளவி என்றால் என்ன?
கோணத்தை அளக்கும் கருவி.
10. அளவுகோல் என்றால் என்ன?
நீளம், உயரம், அகலம் ஆகியவற்றை அளக்கும் கருவி. இதில் அளவுகள் அங்குலத்திலும் செண்டிமீட்டரிலும் குறிப்பிடப்பட்டிருக்கும். மீட்டர் அளவுகோல் பொது வாகப் பயன்படுவது. இது அதிகம் பயன்படுங் கருவி.
11. நழுவுகோல் என்றால் என்ன?
மடக்கை அளவுகள் குறிக்கப் பெற்ற கணக்கிடுங் கருவி அமைப்பு. எண்களைப் பெருக்கப் பயன்படுவது.
12. கணக்கிடுங்கருவி என்றால் என்ன?
கூட்டல், கழித்தல் முதலிய அடிப்படைச் செயல்களைச் செய்யப் பயன்படுங் கருவி அனைவரும் பயன்படுத்துவது.
13. கணிதத்தில் கணிப்பொறியின் பயன் யாது?
எவ்வகைச் சிக்கலையும் தீர்க்கும் ஒரு வியத்தகு மின்னணுக் கருவியமைப்பு இது.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதக் கருவிகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - கருவி, என்ன, என்றால், அளவுகோல்