கணிதம் :: கணிதக் கருவிகள்
1. மணிச்சட்டம் என்றால் என்ன?
பொதுக் கணிதத்தில் எண்ணுவதற்குப் பயன்படும் கருவியமைப்பு. மணிகளாலானது. கணிப்பொறிக்கு முன்னோடி இன்னும் பயன்படுவது. முதல் கணக்கிடுங் கருவி.
2. கூட்டும் பொறி என்றால் என்ன?
கூட்டிப் பார்ப்பதற்குரிய கருவி.
3. கவராயம் என்றால் என்ன?
வட்டம் வரையப் பயன்படும் கருவி. சிறிதாகவும் பெரிதாகவும் இருப்பது.
4. கோல் கவராயம் என்றால் என்ன?
கவராயத்தில் ஒரு வகை. பெரிய வட்டங்கள் வரையப் பயன்படுவது.
5. நேப்பியர் போன்ஸ் என்றால் என்ன?
ஸ்காட்லாந்து கணிதமேதையான நேப்பியர் கூட்டல், கழித்தல், வர்க்கமூலம் ஆகியவற்றைக் கணக்கிட உதவும் கருவியை புனைந்தார். இதுவே நேப்பியர் போன்ஸ் எனப்படும்.
6. கோணமானி என்றால் என்ன?
கோணத்தை அளக்கப் பயன்படுங் கருவி.
7. மூலை மட்டம் என்றால் என்ன?
ஒரு வரை கருவி. கோணங்கள் வரையப் பயன்படுவது. வடிவியல் பெட்டியில் இருப்பது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கணிதக் கருவிகள் - கணிதம், Mathematics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, கருவி, நேப்பியர், பயன்படுவது, வரையப்