புவியியல் :: அனைத்துலகத் திட்டங்கள்

1. ஐஜிஒய் என்றால் என்ன?
அனைத்துலகப் புவி இயற்பியலாண்டு (International Geophysical Year, IGY). புவி இயற்பியல் வளர்ச்சிக்காக அனைத்துலக அளவில் வகுக்கப்பட்ட திட்டம்.
2. இதன் கால எல்லை என்ன?
1957 ஜூன் 30 ஆம் நாள் நள்ளிரவிலிருந்து தொடங்கி 1958 டிசம்பர் 31 ஆம் நாள் இரவோடு முடிவடைந்தது.
3. புவி இயற்பியல் ஆண்டின் கண்டுபிடிப்புகள் யாவை?
1. புவியின் காந்த நடுக்கோட்டைச் சுற்றி மிகப் பரந்த மின்னோட்டம் ஒன்றுள்ளது.
2. பசிபிக் பெருங்கடலில் இரண்டு ஒட்டங்களும் அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் ஒட்டமும் உள்ளன.
3. முனை ஒளிகள் ஒரே சமயத்தில் தோன்றுகின்றன.
4. பசிபிக் பெருங்கடலில் பரந்ததும் சிறந்ததுமான கனி வளப்பகுதி ஒன்றுள்ளது.
5. புவிக் கடியில் 70 கடல்கள் உள்ளன. இவற்றின் நீர் குடிப்பதற்கு ஏற்றது.
6. புவிமேற்பரப்பு கடல் தரையின் நெடுக 45,000 மைல் அளவுக்கு வெடித்துள்ளது.
7. விண்கதிர்கள் புவி நேர்க்கோட்டிற்கேற்ப மாறுபடுகின்றன. இவற்றின் நடுக்கோடு 45'அளவுக்கு மேற்காகச் சாய்ந்துள்ளது. இதனால் வானவெளியிலுள்ள மற்றக் காந்தப் புலங்களால் அலைக்கழிக்கப்டுகிறது.
8. வானவெளியில் பரந்த காந்த மண்டலங்கள் உள்ளன.
4. ஐகுயுஎஸ்ஒய் என்றால் என்ன?
அனைத்துலக அமைதிக்கதிரவன் ஆண்டு என்பது இதன் பொருள் (Intemational Quiet Sunyear, ICSY), ஓர் அணைத்துலக அறிவியல் திட்டம். 1964-1965 இல் நிறைவேறியது.
5. எப்பொழுது இத்திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டது?
கதிரவன் செயல்கள் மிகக் குறைவாக இருக்கும் பொழுது எடுத்துக் கொள்ளப்பட்டது. அதாவது, அது அமைதியாக இருக்கும் நிலையில்.
6. இத்திட்டத்தின் நோக்கம்?
புவி இயற்பியல் நிகழ்ச்சிகளில் கதிரவன் செல்வாக்கு என்ன என்பதை அறிவது.
7. ஆராயப்பட்ட துறைகள் யாவை?
கதிரவன் செயல், அயனவெளி, புவிக்காந்தம், விண்கதிர்கள், விண் ஒளிர்வு, முனை ஒளிகள், புவிக்காற்று வெளிப் பண்புகள்.
8. இந்த ஆராய்ச்சிகளுக்கு பயன்பட்ட கருவிகள் யாவை?
ஏவுகணைகள், வானவெளித்துருவிகள், நில நிலாக்கள், கோளிடைநிலையங்கள்.
9. இதே போன்று இதற்கு முன் நிறைவேற்றப்பட்ட திட்டம் யாது?
ஐஜிஒய் என்னும் அனைத்துலகப் புவி இயற்பியல் ஆண்டு.
10. அனைத்துலக இந்தியக் கடல் ஆராய்ச்சித் திட்டம் எப்பொழுது தொடங்கியது?
1957இல் உருவாகி 1959 இல் தொடங்கிற்று.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனைத்துலகத் திட்டங்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - புவி, திட்டம், என்ன, இயற்பியல், கதிரவன், பெருங்கடலில், அனைத்துலக, யாவை