புவியியல் :: அனைத்துலகத் திட்டங்கள்
11. அனைத்துலகக் கடல் துறைப்பேரவை எப்பொழுது கூடிற்று?
1959 செப்டம்பரில் நியூயார்க்கில் கூடிற்று.
12. இது கூடுவதற்குக் காரணமாக இருந்தவை யாவை?
அனைத்துலக கூட்டுக் கழக மன்றம், யுனெஸ்கோ, அமெரிக்க அறிவியல் முன்னேற்றக் கழகம்.
13. இக்கூட்டத்தில் எத்தனை அறிவியலார் கலந்து கொண்டனர்?
45 நாடுகளிலிருந்து 1100 அறிவியலார் கலந்து கொண்டனர்.
14. இத்திட்டத்தின் பணிகளைச் செயற்படுத்தும் அலுவலகம் எங்கு அமைந்தது?
நியூயார்க்கில் அமைந்தது.
15. இத்திட்டத்தை வகுத்தது யார்?
பல அறிவியல் வல்லுநர் கொண்ட குழு வகுத்தது.
16. இத்திட்டம் செயற்பட்ட காலம் எவ்வளவு?
1960 - 1964 வரை செய்ற்பட்டது.
17. இத்திட்டத்தை நிறைவேற்றிய முறைகள் யாவை?
1. உற்றுநோக்கல், ஒலித்தல், அளவுகள் எடுத்தல், படம் பிடித்தல், மாதிரிகள் திரட்டுதல். இவற்றிற்குக் கப்பல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2. அமெரிக்கா முதலிய நாடுகள் கப்பல்களையும் கடல் நூல் அறிஞர்களையும் வழங்கிற்று.
3.இறுதியாகச் செய்யப்பட்ட பல வகை ஆராய்ச்சிகளின் முடிவுகள் தொகுக்கப்பட்டன. வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு துறையிலும் பயன்படுத்தப்பட்டன.
4. இந்தியக் கடலுக்கு அருகிலுள்ள நாடுகள் கடல் அலைகளின் எழுச்சி வீழ்ச்சிகளில் ஏற்படும் மாற்றங்களையும், காற்று மேல் வெளியில் உருவாகும் வானிலை மாற்றங்களையும் உற்றுநோக்கி ஆராய உதவின.
18. ஆராயப்பட்ட துறைகள் யாவை?
நில அமைப்பு நூல், நில இயல்நூல், கடல்நூல், வானிலை நூல், நீரியல், உயிரியல்.
19. ஆராயப்பட்ட பொருள்கள் யாவை?
மழைப்பொழிவு, கதிர்வீச்சு, ஈர்ப்பு, நிலநடுக்கம், வெப்ப ஒட்டம், காற்று மேல்வெளி, படிவுகள், காந்த மாற்றம், கனிவளம்.
20. இதில் கலந்து கொண்ட நாடுகள் யாவை?
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இலங்கை, இந்தியா, பாக்கிஸ்தான், டென்மார்க், பார்மோசா, பிரான்சு, இந்தோனேஷியா, இஸ்ரேல், ஜப்பான், ஹாலந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு ஜெர்மனி.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனைத்துலகத் திட்டங்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, நூல், நாடுகள், கலந்து, கடல்