புவியியல் :: புவி அமைப்பியல் ஊழிகள்
1. புவி அமைப்பியல் ஊழிகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
1. முன்கேம்பிரியன் ஊழி
2. தொல்லுழி
3. நடு ஊழி
4. அண்மைக்கால ஊழி
2. முன்கேம்பிரியன் ஊழியிலுள்ள பிரிவுகள் யாவை?
1. உயிரிலாக் காலம் - 3000 மில்லியன் ஆண்டுகள். புவி தோன்றுதல். உயிர் தோன்றவில்லை.
2. தொல்லுயிர் காலம் - 2000 மில்லியன் ஆண்டுகள். ஒரு கண்ணறையுள்ள அமீபா, கிளமிடோமோனாஸ் முதலிய விலங்குகளும், தாவர இனங்களும் தோன்றல்.
3. முதல் உயிர் ஊழி - 1200 மில்லியன் ஆண்டுகள். முதுகு எலும்பற்ற விலங்குகள் தோன்றுதல். தொல்படிவங்கள் சில பாதுகாக்கப்படுதல்.
3. தொல்லுழியிலுள்ள பிரிவுகள் யாவை?
1. கேம்பிரியன் - 550 மில்லியன் ஆண்டுகள். முதுகெலும்பற்ற கடல் உயிர்கள் தோன்றுதல்.
2. ஆர்டோவிசியன் - 480 மில்லியன் ஆண்டுகள். பவழங்கள், கடற்பஞ்சுகள் முதலிய முதுகெலும்பற்ற விலங்குகள் தோன்றுதல். தொல்கால மீன்கள் தோன்றல்.
3. சைலூரியன் - 435 மில்லியன் ஆண்டுகள். பவழங்கள் மலைத் தொடர்களை அமைத்தல். நில முதுகெலும்புள்ள விலங்குகள் தோன்றுதல். மீன் வகைகளும் பெருகுதல்.
4. டிவோனியன் - 405 மில்லியன் ஆண்டுகள். முதுகெலும்புள்ள விலங்குகள் தோன்றுதல். மீன்கள் நிரம்ப இருத்தல். தவளை முதலிய இரு நிலை வாழ்விகளும் பூச்சிகளும் தோன்றுதல்.
5. கரியடக்கக் காலம் - 300 மில்லியன் ஆண்டுகள். தவளை முதலிய நிலம்நீர் வாழ்வுன, பூச்சிகள் தோன்றுதல். சுறா மீன்கள் தோன்றுதல்.
6. பர்மியன் - 260 மில்லியன் ஆண்டுகள். சுறாக்கள் நிலைத்திருத்தல். பூச்சிகள் நிரம்ப இருத்தல். ஊர்வன பெருகுதல்.
4. நடு ஊழியிலுள்ள பிரிவுகள் யாவை?
1. மூவூழி. 225 மில்லியன் ஆண்டுகள். கடல் முதுகெலும்பற்ற விலங்குகள் எண்ணிக்கையில் குறைதல். தினோசார்களும் நண்டின் உயிரிகளும் தோன்றுதல்.
2. ஜிராசிக் (இயல்பு வாழ்காலம்). 180 மில்லியன் ஆண்டுகள். தினோசார்கள் அதிகமிருத்தல். தொல்காலப் பறவைகள் இக்கால நண்டின் உயிர்கள் பெருகுதல்.
3. கிரேட்டேசியஸ் - 130 மில்லியன் ஆண்டுகள். தினோசார்கள் அற்றுப் போதல். தொடக்ககால பாலூட்டிகள் தோன்றுதல்.
5. அண்மைக்கால ஊழியின் பிரிவுகள் யாவை:
1. பாலியோசீன் - 65 மில்லியன் ஆண்டுகள. இக்கால முதுகெலும்பற்ற விலங்குகள் தோன்றுதல். தொடக்க காலப் பாலூட்டிகள் தோன்றுதல்.
2. ஈயோசீன் - 55 மில்லியன் ஆண்டுகள். தொடக்க காலப் பாலூட்டிகள் தோன்றுதல். இவை இப்பொழுது இல்லை. மெல்லுடலிகளும் (நத்தை) குளம்புள்ள விலங்குகளும் தோன்றுதல்.
3. ஆலிகோசீன் - 38 மில்லியன் ஆண்டுகள். பல பாலூட்டிகள் அற்றுப் போதல். குரங்குகள் முதலிய விலங்குகள் தோன்றுதல்.
4. மைலோசீன் - 25 மில்லியன் ஆண்டுகள். பாலூட்டிகளும் நத்தைகளும் தற்காலப் பண்புகளைப் பெறுதல். திமிங்கிலங்களும் மனிதக் குரங்குகளும் தோன்றுதல்.
5. பிளையோசீன் - 10 மில்லியன் ஆண்டுகள். பாலூட்டிகள் பெருகுதல். ஊன் உண்ணிகளும் தோன்றுதல். ஆப்பிரிக்காவில் முதல் குரங்கு மனிதன் தோன்றுதல்.
6. பிளைஸ்டோசீன் - 2 மில்லியன் ஆண்டுகள். எல்லாப் பெரும் பிரிவு உயிரினங்களும் தோன்றுதல். கணுக்காலிகளும் மெல்லுடலிகளும் நிரம்ப இருத்தல். இக்கால மனிதன் தோன்றுதல்.
7. ஓலோசீன் - இறுதி 11000 ஆண்டுகள். மனித நாகரிகம் தோன்றிப் பெருகுதல்.
6. கரியடக்கக் காலத்தில் அடங்கும் பிரிவுகள் யாவை?
1. மிசிசிப்பியன்
2. பெனிசில்வேனியன்.
7. மிசிசிப்பியன் காலத்தில் எவ்வகை உயிர்கள் இருந்தன?
340 மில்லியன் ஆண்டுகள். தவளைகளும் தேரைகளும் பூச்சிகளும் இருந்தன. சுறாமீன்கள் நிரம்ப இருந்தன.
8. பெனிசில்வேனியன் காலத்தில் எவ்வகை உயிர்கள் இருந்தன?
300 மில்லியன் ஆண்டுகள். பூச்சிகளும் சுறாமீன்களும் அதிகம் இருந்தன. முதல் ஊர்வன தோன்றுதல்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புவி அமைப்பியல் ஊழிகள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - தோன்றுதல், ஆண்டுகள், மில்லியன், விலங்குகள், பாலூட்டிகள், பிரிவுகள், பெருகுதல், இருந்தன, யாவை, முதலிய, நிரம்ப, உயிர்கள், முதுகெலும்பற்ற, காலத்தில், காலம், இக்கால, இருத்தல், பூச்சிகளும், மீன்கள்