உன்னத சங்கீதம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 8
2 உம்மை என் தாய்வீட்டுக்கு- என்னைக் கருத்தாங்கிப் பெற்றவளின் அறைக்குள் கூட்டிக் கொண்டு வருவேன். வாசனை கலந்த இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன், என் மாதுளம் பழச் சாற்றைப் பருகத் தருவேன்.
3 அவரது இடக்கையால் என் தலையை அணைத்துக் கொண்டு, வலக்கையால் அவர் என்னைத் தழுவிடுவார்.
4 தலைமகன்: யெருசலேமின் மங்கையரே, ஆணையிட்டுச் சொல்கிறேன்: அன்புடையாளை எழுப்பாதீர்@ தானே விழிக்கும் வரை தட்டியெழுப்பாதீர்.
5 முடிவுரை: பாடகர்க்குழு: தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு பாலைவெளியிலிருந்து எழுந்து வரும் அவள் யார்? தலைமகன்: கிச்சிலி மரத்தடியில் நான் உன்னை எழுப்பினேன், அங்கே தான் உன் தாய் நோயுற்று உன்னைப் பெற்றாள், உன்னைப் பெற்றவள் உன்னைப் பெற வேதனையுற்றாள்.
6 நீ என்னை உன் இதயத்தின் மேல் முத்திரையாகவும், கையிலே இலச்சினையாகவும் பொறித்து வை. ஏனெனில் காதல் சாவைப் போல் வலிமையுள்ளது, காதல் வைராக்கியம் பாதாளம் போல் கொடியது@ அதன் சுடர்கள் நெரூப்புச் சுடர்கள் போலும்! அதன் கொழுந்து கொடிய தீக்கொழுந்தையொக்கும்!
7 பெருங்கடலும் அன்பைத் தணிக்க முடியாது, வெள்ளப் பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது. பிற்சேர்க்கைகள்: அறிஞன் ஒருவனின் முதுமொழி: அன்பைப் பெறுவதற்காக ஒருவன் தன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் வாரி வழங்கினாலும், இகழ்ச்சியையே பெற்றுக் கொள்வான்.
8 விடுகதைகள் இரண்டு: நம்முடைய தங்கை சிறியவள்@ அவளுக்கு இன்னும் கொங்கைகள் முகிழ்க்கவில்லை@ அவளைப் பெண்பேச வரும் நாளில் நம் தங்கைக்காக நாம் என்ன செய்வோம்?
9 அவள் ஒரு மதிலானால், அதன் மேல் வெள்ளி அரண்களைக் கட்டுவோம். அவள் கதவு நிலையானால், கேதுரு பலகைகள் வைத்து அடைப்போம்.
10 நான் மதில்தான்@ என் கொங்கைகள் அதன் கோபுரங்கள்@ அவர் கண்களின் பார்வையில் நான் அமைதி கண்டவளைப் போல் ஆனேன்.
11 பாகாலம்மோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அவர் அந்தத் திராட்சைத் தோட்டத்தைத் தம் காவலர்களிடம் ஒப்புவித்து அதன் பலனுக்காக ஒவ்வொருவனும் ஆயிரம் வெள்ளிக்காசு கொடுக்கும்படி சொன்னார்.
12 எனது திராட்சைத் தோட்டம் என் கண் முன் இருக்கிறது: சாலமோனே, ஆயிரம் வெள்ளிக்காசு உமக்கிருக்கட்டும்@ உம் காவலர்களுக்கும் இருநூறு காசுகள் இருக்கட்டும்.
13 இறுதிப் பிற்சேர்க்கைகள்: தோட்டங்களில் வாழ்கிறவளே! என் தோழர்கள் உன் குரலொலிக்குச் செவி மடுத்துக் கவனமாய்க் கேட்கிறார்கள்: நானும் அதைக் கேட்கக் கூடாதோ?
14 என் காதலரே! விரைந்து ஓடிவிடுக! வாசனைச் செடிகளுள்ள மலைகளில் இருக்கும் வெளிமானுக்கும் இளங் கலைமானுக்கும் ஒப்பாய்த் தோன்றுக!
தேடல் தொடர்பான தகவல்கள்:
உன்னத சங்கீதம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, நான், பழைய, உன்னத, திராட்சைத், உன்னைப், போல், அவர், அவள், கொண்டு, சங்கீதம், பிற்சேர்க்கைகள், கொங்கைகள், வெள்ளிக்காசு, தோட்டம், ஆயிரம், சுடர்கள், வரும், ஆன்மிகம், திருவிவிலியம், என்னை, தலைமகன், மேல், காதல்