பழமொழி ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 31
2 என் அன்பனே, என்ன ? என் வயிற்றின் நேசனே, என்ன ? என் ஆசைகளின் இனியனே, என்ன ?
3 உன் பொருளைப் பெண்களுக்கும், அரசரை அழிக்கும்படியாக உன் செல்வத்தையும் தராதே.
4 அரசருக்கு வேண்டாம், ஓ லாமுவேல்! அரசருக்குக் கொடிமுந்திரிப்பழச் சாற்றைக் கொடுக்கவேண்டாம். ஏனென்றால், குடிமயக்கம் ஆள்கின்ற இடத்தில் இரகசியமே கிடையாது.
5 அவர்கள் மதுபானம் அருந்தினால் ஒருவேளை நீதித்தீர்ப்புகளையும் மறந்து, ஏழையின் மக்களுடைய வழக்கையும் மாற்றுவார்கள்.
6 சஞ்சலமுள்ளவர்களுக்கு மதுபானத்தையும், துயர மனமுடையோருக்குக் கொடிமுந்திரிப் பழச் சாற்றையும் கொடுங்கள்.
7 அவர்கள் குடித்துத் தங்கள் கேட்டினை மறந்தும், தங்கள் துன்பத்தை இனி நினையாமலும் இருப்பார்களாக.
8 ஊமைக்காகவும், உன்னிடம் வருகிற கைவிடப்பட்டவர்களுக்காகவும் உன் வாயைத்திற.
9 உன் வாயைத்திறந்து நீதியானதைக் கற்பி@ இல்லாதவனையும் ஏழையையும் நியாயந்தீர்.
10 வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்.
11 அவள் கணவனின் இதயம் அவள்பால் நம்பிக்கை கொள்கின்றது. கொள்ளைப் பொருட்களும் அவனுக்குக் குறைவுபடா.
12 அவள் அவனுக்குத் தன் வாழ்நாட்கள் அனைத்தும் தீமையை அல்ல, நன்மையையே அளிப்பாள்.
13 அவள் ஆட்டு மயிரையும் சணல் நூலையும் தேர்ந்தெடுத்துத் தன் கைத் திறமையால் வேலை செய்தாள்.
14 தூரத்தினின்று அப்பத்தைக் கொண்டு வருகிற கப்பல் போலானாள்.
15 இரவிலே எழுந்து தன் ஊழியருக்கு அருமையான பொருளையும், தன் ஊழியக்காரிகளுக்கு உணவு வகைகளையும் தந்தாள்.
16 வயல் நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து அதை வாங்கினாள். தன் கைகளின் பலத்தால் கொடிமுந்திரித் தோட்டத்தையும் நட்டாள்.
17 திடத்தால் தன் இடைகளை வரிந்துகட்டித் தன் புயத்தையும் பலப்படுத்தினாள்.
18 அவள் சுவை பார்த்துத் தன் வியாபாரம் நலமானதென்று கண்டாள். அவளுடைய விளக்கு இரவில் அணைக்கப்படாது.
19 வன்மையான காரியங்களுக்குத் தன் கைகளை உபயோகித்தாள். அவளுடைய விரல்கள் சிம்புக் கதிரைப் பிடித்தன.
20 வகையில்லாதவனுக்குத் தன் கைகளைத் திறந்தாள். தன் உள்ளங்கைகளை ஏழைக்கு நீட்டினாள்.
21 பனியின் குளிர் நிமித்தம் தன் வீட்டாரைப்பற்றி அஞ்சமாட்டாள். ஏனென்றால், அவளுடைய ஊழியர் அனைவருமே இரட்டை (ஆடை)யால் உடுத்தப் பட்டிருக்கிறார்கள்.
22 கம்பளி ஆடையைத் தனக்குச் செய்திருக்கிறான். மெல்லிய சணலும் கருஞ் சிவப்பு ஆடையும் அவளுடைய போர்வையாம்.
23 அவள் கணவன் பூமியின் ஆலோசனைச் சங்கத்தாருடன் உட்கார்ந்திருக்கையில் நியாய வாயிலில் மகிமை பெறுவான்.
24 அவள் முக்காட்டுத் துணியும் செய்து விற்றாள். கனானேயனுக்கு இடைக் கச்சையையும் கொடுத்து விட்டாள்.
25 வலிமையும் அழகும் அவளுக்கு உடை(யாம்). கடைசி நாளிலும் அவள் நகைப்பாள்.
26 ஞானத்துக்குத் தன் வாயைத் திறந்தாள். அவளுடைய நாவில் சாந்தத்தின் நீதிமுறை உள்ளதாம்.
27 அவள் தன் இல்லத்தின் வழிகளை உற்றுப்பார்த்தாள்@ சோம்பலாய்த் தன் அப்பத்தை உண்ணாள்.
28 அவளுடைய புதல்வர் எழுந்து அவளைப் பேறுடையாள் என்று முழங்கினார்கள். அவள் கணவனும் அவளைப் புகழ்ந்தான்.
29 பல மகளிர் செல்வங்களைச் சேகரித்தார்கள்@ நீயோ அனைவரையும் கடந்து மேலானவள் ஆனாய்.
30 அழகு பொய்யும், எழில் வீணுமாம். ஆண்டவருக்குப் பயப்படுகிற பெண்ணே புகழப்படுவாள்.
31 அவளுடைய கைகளினின்று பெறும் பலனை அவளுக்கே கொடுங்கள். அவளுடைய செயல்களே (நடுவரின்) சங்கங்களில் அவளைப் புகழக்கடவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி ஆகமம் - பழைய ஏற்பாடு, அவள், அவளுடைய, ஏற்பாடு, பழைய, அவளைப், பழமொழி, என்ன, ஆகமம், எழுந்து, திருவிவிலியம், திறந்தாள், ஆன்மிகம், வருகிற, லாமுவேல், ஏனென்றால், கொடுங்கள், தங்கள், அவனுக்குக்