ஓசே ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 8
2 அவர்கள் நம்மை நோக்கிக் கூக்குரலிட்டு, "எங்கள் இறைவா, இஸ்ராயேலராகிய நாங்கள் உம்மை அறிவோம்" என்று சொல்லுகிறார்கள்.
3 இஸ்ராயேல் நன்மையைத் தள்ளிவிட்டது, ஆதலால் பகைவன் அதைத் துரத்துவான்.
4 அவர்களே தங்களுக்கு அரசர்களை ஏற்படுத்திக் கொண்டனர், ஆனால், அதுபற்றி அவர்கள் நம் ஆலோசனை கேட்கவில்லை. அவர்களே தலைவர்களை வைத்துக் கொண்டார்கள், நாமோ அதைப் பற்றி ஒன்றுமறியோம்@ தங்களது வெள்ளி, பொன் கொண்டு சிலை செய்து கொண்டார்கள், தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்து கொண்டார்கள்.
5 சமாரியாவே, உன் கன்றுக்குட்டியை நாம் வெறுக்கிறோம், நம் கோபத்தீ அதற்கு எதிராய் எரிகின்றது, இன்னும் எத்துணைக்காலம் தூய்மையடையாமல் இருப்பார்கள்?
6 ஏனெனில் அக்கன்றின் சிலை இஸ்ராயேலில் செய்யப்பட்டது, அதை ஒரு தொழிலாளி செய்தான்@ எனவே அது கடவுளன்று@ சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும்.
7 ஏனெனில் அவர்கள் விதைப்பது காற்று, அறுக்கப்போவது கடும் புயல்@ கோதுமை கதிர் வாங்காது, கோதுமை மணி மாவு தராது, அப்படியே தரினும், அந்நியரே அதை விழுங்குவர்.
8 பிறரை நமபி இஸ்ராயேல் பாழாயிற்று: இஸ்ராயேல் விழுங்கப்பட்டு விட்டது, ஏற்கனவே அவர்கள் புறவினத்தார் நடுவில் உதவாத பாத்திரம் போல் இருக்கின்றார்கள்.
9 தனிமையில் திரிகிற காட்டுக் கழுதையான அசீரியாவைத் துணையாகத் தேடிப் போயினர், எப்பிராயீம் காசு கொடுத்துக் காதல் செய்கிறது.
10 புறவினத்தார் நடுவில் துணைவர்களைக் கைக்கூலி கொடுத்து அமர்த்தினாலும், விரைவில் அவர்களைச் சிதறடிப்போம்@ அரசனையும் தலைவர்களையும் அபிஷேகம் செய்யாமல் கொஞ்ச காலத்திற்கு ஓய்ந்திருப்பார்கள்.
11 பாவம் செய்வதற்காகவே எப்பிராயீம் பீடங்களைப் பலவாகச் செய்து கொண்டதால், அந்தப் பீடங்கள் அவர்கள் பாவஞ் செய்வதற்கே காரணமாயின.
12 பத்தாயிரம் சட்டங்களை அவர்களுக்கு நாம் எழுதிக் கொடுத்தாலும் அவை நமக்கில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.
13 அவர்கள் பலியை விரும்புகிறார்கள், பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்@ ஆயினும் ஆண்டவர் அவற்றில் விருப்பம் கொள்ளவில்லை@ அதற்கு மாறாக அவர்களுடைய அக்கிரமத்தை நினைவில் கொண்டு, அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை தருவார்@ அவர்களோ எகிப்து நாட்டுக்குத் திரும்புவார்கள்.
14 தன்னைப் படைத்தவரை இஸ்ராயேல் மறந்துவிட்டு அரண்மனைகளைக் கட்டினான்@ யூதாவோ அரண் சூழ் பட்டணங்கள் பலவற்றை எழுப்பினான், நாமோ அவன் பட்டணங்கள்மேல் தீயனுப்புவோம், அவன் அரண்களை அது பொசுக்கி விடும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 13 | 14 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஓசே ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, இஸ்ராயேல், பழைய, கொண்டார்கள், ஆகமம், ஏனெனில், செய்து, கோதுமை, புறவினத்தார், எப்பிராயீம், அவன், கொடுத்து, அதற்கு, நடுவில், கொண்டு, ஆன்மிகம், திருவிவிலியம், அவர்களே, நாமோ, சிலை, நாம்