எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 46
2 இந்நாட்களில் தலைவன் வெளிவாயில் மண்டபத்தின் வழியாய் உள்ளே நுழைந்து வாயிற்படி அருகில் நிற்பான். அப்பொழுது அர்ச்சகர்கள் அவனுடைய தகனப் பலியையும் சமாதானப் பலியையும் செலுத்துவார்கள்@ அவனோ வாயிலருகிலேயே நின்று வழிபாடு செய்து விட்டுப் போவான்@ அவ்வாயில் அன்று மாலை வரை திறந்தே கிடக்கும்.
3 நாட்டு மக்களும், ஓய்வு நாட்களிலும் அமாவாசை நாட்களிலும் அவ்வாறே வாயிலருகில் நின்று ஆண்டவரின் திருமுன் அவருக்கு வழிபாடு செலுத்துவர்.
4 ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குத் தகனப் பலியாக மாசற்ற ஆட்டுக்குட்டிகள் ஆறும், பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றும் ஒப்புக் கொடுப்பான்@
5 அவற்றோடு உணவுப் பலியும் தருவான்@ ஒவ்வொரு ஆட்டுக்கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக் குட்டிகளுடன் தனக்கு விருப்பமான அளவு மாவும், ஒவ்வொரு மரக்கால் மாவுக்கும் ஒரு படி எண்ணெயும் படைக்க வேண்டும்.
6 அமாவாசைப் பண்டிகை நாளில் மந்தையிலிருந்து மாசில்லாத காளையொன்றும், மாசற்ற ஆட்டுக்குட்டிகள் ஆறும், பழுதற்ற ஆட்டுக்கடா ஒன்றும் பலியாக ஒப்புக்கொடுப்பான்.
7 ஒவ்வொரு காளையுடன் ஒரு மரக்கால் மாவும், ஒவ்வொரு ஆட்டுக் கடாவுடன் ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக் குட்டிகளுடன் தனக்கு விருப்பமான அளவு மாவும், ஒவ்வொரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணெயும் படைக்கக்கடவான்.
8 "தலைவன் உள்ளே வருகிற போது, வாயில் மண்டபத்தின் வழியாக நுழைந்து, அதே வழியாய் வெளியேற வேண்டும்.
9 பொதுமக்கள் திருநாட்களின் காலத்தில் ஆண்டவருடைய திருமுன்னிலைக்கு வருகிற போது, வழிபாடு செய்ய வடக்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் தெற்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்@ தெற்கு வாயில் வழியாய் உள்ளே வந்தவன் வடக்கு வாயில் வழியாய் வெளியே போக வேண்டும்@ தான் உள்ளே வந்த வாயில் வழியாய்த் திரும்பிப் போகாமல், அதற்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும் வாயில் வழியாய்த் தான் வெளியேற வேண்டும்.
10 தலைவன் பொது மக்களுடன் வரும் போது, உள்ளே போகிறவர்களோடு சேர்ந்து உள்ளே போய், வெளியேறுகிறவர்களோடு வெளியேறுவான்.
11 விழாக்களிலும் பண்டிகை நாட்களிலும் கொடுக்கும் உணவுப்பலி: இளங்காளையோடு ஒரு மரக்கால் மாவும், கடாவோடு ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக் குட்டிகளோடு அவனவன் விருப்பத்திற்கேற்ற அளவு மாவும், ஒரு மரக்கால் மாவுடன் ஒரு படி எண்ணெயும் ஒப்புக் கொடுத்தல் வேண்டும்.
12 தலைவன் தகனப் பலியையோ சமாதானப் பலிகளையோ ஆண்டவருக்கு விருப்பப் பலியாகச் செலுத்த வரும் போது, கிழக்கு நோக்கியிருக்கும் வாயிலை அவனுக்குத் திறந்து விட வேண்டும்@ அப்பொழுது அவன் ஓய்வு நாளில் செய்வது போலத் தகனப் பலியையோ சமாதானப் பலிகளையோ ஒப்புக் கொடுப்பான்@ அவன் வெளியே போனதும் அவ்வாயில் மூடப்படும்.
13 அவன் நாடோறும் ஓராண்டு வயதுள்ள மாசற்ற ஆட்டுக்குட்டி ஒன்றை ஆண்டவருக்குத் தகனப் பலியாகத் தரவேண்டும்@ அப்பலி காலை நேரத்தில் தான் செலுத்தப்படும்.
14 இவ்வாட்டுக் குட்டியுடன் நாடோறும் காலையில் ஒரு மரக்கால் மாவில் ஆறிலொரு பங்கையும், மாவோடு பிசைய ஒரு படி எண்ணெயில் மூன்றிலொரு பங்கையும் உணவுப் பலியாகப் படைக்கவேண்டும்@ இது நாடோறும் ஆண்டவருக்கு என்றென்றைக்கும் ஒப்புக்கொடுக்க வேண்டிய பலியாகும்.
15 இவ்வாறு நாடோறும் காலையில் தகனப்பலியும், உணவுப்பலியாக மாவும் எண்ணெயும் ஒப்புக் கொடுக்கப் படல் வேண்டும்.
16 ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: தலைவன் தன் புதல்வர்களுள் ஒருவனுக்கு ஏதேனும் அன்பளிப்புத் தந்தால், அவனுடைய புதல்வர்களுக்கு அது சொந்தமாகும்@ இவர்கள் உரிமைச் சொத்தாக அதனைக் கையாளுவர்.
17 ஆனால் தலைவன் தன் சொத்திலிருந்து எதையாவது தன் ஊழியனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தால், அது விடுதலையாண்டு வரையில் அவ்வூழியனுக்குச் சொந்தமாயிருக்கும்@ பிறகு திரும்பத் தலைவனுக்குச் சொந்தமாகும்@ அவனுடைய புதல்வர்கள் மட்டுமே தந்தையின் சொத்திலிருந்து பெற்ற அன்பளிப்பைத் தங்களுக்கே வைத்துக் கொள்ளலாம்.
18 தலைவன் குடிமக்களின் சொத்திலிருந்து எதையும் எடுக்கலாகாது@ அவர்களுடைய உரிமையைப் பறிமுதல்செய்து எடுக்கலாகாது@ நம் மக்களுள் எவனும் தன் உரிமையான சொத்துக்குப் புறம்பாக்கப்பட்டு இழக்காதிருக்க தலைவன் தன் புதல்வர்களுக்குத் தன் சொத்திலிருந்தே சொத்துரிமை கொடுக்கவேண்டும்."
19 பின் அந்த மனிதர் வாயில் பக்கத்திலிருந்த நடைவழியாக, அர்ச்சகர்களின் அறைகள் இருந்த வடக்கு வரிசைக்கு என்னைக் கூட்டிவந்தார்@ அவற்றின் மேற்குக் கோடியில் ஓர் இடம் இருந்தது.
20 அவர் என்னை நோக்கி: "பாவப் பரிகாரப்பலி, குற்றப் பரிகாரப்பலி, சாதாரண பலிப்பொருட்கள் ஆகியவற்றை அர்ச்சகர்கள் சமைக்கும் இடம் இதுவே@ அவர்கள் அவற்றை வெளிப்பிராகாரத்திற்குக் கொண்டு போய்ப் பரிசுத்தத்தைப் பொதுமக்களுக்குக் கொடுத்துவிடலாகாது" என்றார்.
21 பிறகு அவர் என்னை வெளிப்பிராகாரத்திற்கு அழைத்துக் கொண்டுபோய், பிராகாரத்தின் நான்கு மூலைகளையும் சுற்றி வரச் சொன்னார்@ பிராகாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு சிறிய பிராகாரம் இருந்தது@
22 பிராகாரத்தின் நான்கு மூலையிலும் இருந்த சிறிய பிராகாரங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமும் உள்ளவை@ நான்கும் ஒரே அளவானவை.
23 இந்தச் சிறிய பிராகாரங்கள் ஒவ்வொன்றைச் சுற்றிலும் ஒரு சுற்றுக்கட்டுச் சுவர் இருந்தது@ அந்தச் சுவரின் அடியில் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தன.
24 அவர் என்னைப்பார்த்து: "பொதுமக்கள் இடும் பலிமிருகங்களின் இறைச்சியை ஆண்டவருடைய கோயிலில் ஊழியஞ் செய்வோர் சமைக்கின்ற சமையற்கட்டு இதுவே" என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எசேக்கியேல் ஆகமம் - பழைய ஏற்பாடு, மரக்கால், வாயில், தலைவன், மாவும், உள்ளே, வழியாய், ஒவ்வொரு, ", ஏற்பாடு, வேண்டும், தகனப், எண்ணெயும், ஒப்புக், போது, நாடோறும், ஆட்டுக், பழைய, ஓய்வு, அவர், மாசற்ற, நாளில், ஆகமம், வடக்கு, அவன், எசேக்கியேல், சொத்திலிருந்து, தான், அளவு, நாட்களிலும், வழிபாடு, வெளியே, சிறிய, வேண்டும்@, அவனுடைய, பிராகாரத்தின், சமாதானப், ஆண்டவருக்கு, தெற்கு, வந்தவன், பலிகளையோ, வரும், வழியாய்த், பலியையோ, இருந்த, நான்கு, என்றார், மூலையிலும், இருந்தது@, சுற்றிலும், பிராகாரங்கள், பரிகாரப்பலி, என்னை, சொந்தமாகும்@, பங்கையும், பிறகு, எடுக்கலாகாது@, இடம், காலையில், மாவுடன், ஆட்டுக்குட்டிகள், பலியாக, ஆண்டவருக்குத், ஆறும், பழுதற்ற, ஒன்றும், ஆட்டுக்கடா, அவ்வாயில், நின்று, நாளிலும், அமாவாசை, நுழைந்து, அப்பொழுது, பலியையும், அர்ச்சகர்கள், கிழக்கு, கொடுப்பான்@, பண்டிகை, திருவிவிலியம், மண்டபத்தின், வருகிற, பொதுமக்கள், வெளியேற, ஆன்மிகம், விருப்பமான, கூறுகிறார், உணவுப், இறைவன், ஆண்டவராகிய, தனக்கு, குட்டிகளுடன், ஆண்டவருடைய