யாத்திராகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 5
2 அதற்கு அவன்: நான் ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்டு இஸ்ராயேலரைப் போக விட வேண்டிய தென்ன? அந்த ஆண்டவர் யார்? நான் ஆண்டவரையும் அறியேன்@ இஸ்ராயேலரைப் போக விடவும் மாட்டேன் என்றான்.
3 அதற்கு அவர்கள்: எபிரேயரின் கடவுள் எங்களை அழைத்து, பாலைவனத்தில் மூன்று நாள் பயணம் செய்து கடவுளாகிய எமது ஆண்டவருக்குப் பலி செலுத்தும்படி திருவுளமானார். நாங்கள் போகாவிடில், கொள்ளை நோயும் வாளும் எங்கள்மேல் வரக்கூடும் என்றனர்.
4 அதற்கு எகிப்து மன்னன்: மோயீசா, ஆரோனே, தங்கள் வேலைகளைச் செய்யாதபடி நீங்கள் மக்களைக் குழப்பி விடுவதென்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப் போங்கள் என்றான்.
5 மீண்டும் பாரவோன்: (உங்கள்) இனத்தார் நாட்டில் மிகுந்து போயிருக்கிறார்கள். ஒருவரும் கவனியாமையால், அவர்கள் பெரும் திரளாய்ப் பெருகிப் பலுகியிருக்கிறார்கள் என்று உங்களுக்குச் சலுகை காட்டினால், மேன்மேலும் விருத்தி அடைவார்களே என்றான்.
6 அதே நாளில், அவன் வேலை வாங்கும் விசாரணைக்காரர்களுக்கும் ஊர்த் தலையாரிகளுக்கும் கட்டளை இட்டதாவது:
7 செங்கல் வேலை செய்வதற்காக நீங்கள் அந்த இனத்தாருக்கு முன்போல வைக்கோல் கொடுக்க வேண்டாம். அவர்களே போய் வைக்கோலைச் சேர்த்து வரட்டும்.
8 மேலும், அவர்கள் முன்பு செய்து கொடுத்த கணக்குக்குச் சரியாகச் செங்கல் அறுத்துக் கொடுக்கக் கடவார்கள். அதிலே நீங்கள் சிறிதும் குறைக்க வேண்டாம். அவர்கள் சோம்பேறியாய் இருப்பதால் அல்லவா, நாங்கள் போய் எங்கள் கடவுளுக்குப் பலியிடுவோம் என்று கூச்சலிட்டிருக்கின்றார்கள்?
9 அவர்களின் பொருளற்ற எவ்விதப் பேச்சுக்களுக்கும் செவி கொடாமல், நீங்கள் அவர்களுக்குத் தாளாத வேலை இட்டு வாருங்கள். அவர்களும் அதைக் கண்டிப்பாய்ச் செய்து முடிக்கக் கடவர்.
10 ஆகையால், வேலைவாங்கும் மேற்பார்வையாளரும் ஊர்த் தலையாரிகளும் புறப்பட்டுச் சென்று, மக்களை நோக்கி: பாரவோன் சொல்லுவதாவது: உங்களுக்கு நாம் வைக்கோல் கொடோம்.
11 நீங்களே போய், எங்கேயாவது தேடிக் கொள்ளுங்கள். உங்கள் வேலையோ சிறிதுகூடக் குறைக்கப்படாது என்றனர்.
12 ஆதலால், மக்கள் வைக்கோல் சேகரிக்கும்படி எகிப்து நாட்டின் நான்கு திக்கிலும் அலைந்து திரிந்தனர்.
13 மீண்டும் வேலைவாங்கும் மேற்பார்வையாளர் அவர்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்பட்டு வந்த நாட்களில் நீங்கள் எந்தக் கணக்கின்படி செய்து வந்தீர்களோ, இப்போதும் அந்தக் கணக்குப்படி நாள் தோறும் வேலை செய்து முடிக்க வேண்டும் எள்று வலியுறுத்திச் சொன்னார்கள்.
14 பாரவோன் நியமித்திருந்த தலையாரிகள் இஸ்ராயேல் மக்கள்மேல் நியமித்திருந்த கண்காணிப்பாளரை நோக்கி: செங்கல் வேலையிலே பழைய கணக்குப்படி நீங்கள் நேற்றும் இன்றும் ஏன் செய்து முடிக்கவில்லை என்று சொல்லி, அவர்களைக் கசையால் அடித்து வந்தனர்.
15 அப்போது இஸ்ராயேல் மக்கள் மேல் கண்காணிப்பாளராய் இருந்தவர்கள் வந்து, பாரவோனை நோக்கிக் கூச்சலிட்டு: நீர் அடியோர்களை இப்படி விரோதித்துச் செய்வதென்ன?
16 வைக்கோலோ எங்களுக்குத் தரப்படுவதில்லை. செங்கல்களை முன் போல அறுத்துத்தீர வேண்டியிருக்கிறதே! இதோ, அடியோர்கள் கசைகளால் அடிபடுகிறோம். உம் மக்களுக்கு அநீதி செய்யப்பட்டு வருகிறதே! (என்றனர்).
17 அதற்கு அவன்: நீங்கள் சோம்பலாய் இருப்பதனால் அல்லவா, ஆண்டவருக்குப் பலியிடப் போவோம் என்கிறீர்கள்? நல்லது.
18 போய் வேலையைச் செய்யுங்கள். வைக்கோலும் உங்களுக்குத் தரப்படா@ வாடிக்கையான செங்கற் கணக்கை நீங்கள் செலுத்தியாகவும் வேண்டும் என்றான்.
19 அப்போது, இஸ்ராயேல் மக்களின் கண்காணிப்பாளர்கள்: நீங்கள் ஒவ்வொரு நாளும் அறுத்துத் தீரவேண்டிய செங்கற் கணக்கிலே ஒன்றும் குறைக்கக் கூடாது என்று சொல்லப்பட்டதைப் பற்றித் தங்களுக்கு இக்கட்டு நேரிட்டிருப்பது கண்டு, பாரவோன் முன்னிலையினின்று புறப்பட்டு வந்தனர்.
20 அப்பொழுது, வழியிலே நின்றுகொண்டிருந்த மோயீசனையும் ஆரோனையும் சந்தித்து, அவர்களை நோக்கி:
21 ஆண்டவர் உங்களை விசாரித்துத் தீர்வையிடக் கடவாராக. ஏனென்றால், நீங்கள் பாரவோனுக்கும் அவன் ஊழியருக்கும் முன்பாக, எங்கள் நறுமணத்தை நாற்றமாக மாற்றி, அவர்கள் எங்களைக் கொல்லும்படியான வாளை, அவர்கள் கையிலே கொடுத்திருக்கிறீர்களே என்று முறையிட்டனர்.
22 அப்பொழுது மோயீசன் ஆண்டவரிடம் திரும்பிப் போய்: ஆண்டவரே, நீர் இந்த மக்களுக்குத் துன்பம் வருவித்ததென்ன?
23 அடியேனை ஏன் அனுப்பினீர்? இதோ, நான் உம்முடையை பெயரைச் சொல்லிப் பாரவோனிடம் சென்று பேசினது முதல், அவன் உம் மக்களைத் தொல்லைப் படுத்தி வருகிறான். நீர் அவர்களை விடுதலையாக்கவில்லையோ என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 39 | 40 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யாத்திராகமம் - பழைய ஏற்பாடு, நீங்கள், போய், செய்து, பழைய, ஏற்பாடு, அவன், பாரவோன், வைக்கோல், நோக்கி, வேலை, என்றான், அதற்கு, என்றனர், உங்கள், யாத்திராகமம், செங்கல், நீர், அவர்களை, ஆண்டவர், இஸ்ராயேல், நான், செங்கற், உங்களுக்கு, சென்று, அப்பொழுது, மக்கள், வந்தனர், வேண்டும், நியமித்திருந்த, வேலைவாங்கும், அப்போது, கணக்குப்படி, மீண்டும், இஸ்ராயேலரைப், அந்த, கடவுளாகிய, பாரவோனிடம், திருவிவிலியம், ஆன்மிகம், நாள், ஆண்டவருக்குப், வேண்டாம், அல்லவா, ஊர்த், எகிப்து, நாங்கள், எங்கள்