எஸ்தர் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 15
2 நீ சிறுமியாய் இருந்த போது நான் உன்னை எவ்வாறு வளர்த்து வந்தேன் என்று எண்ணிப்பார். இதோ, அரசருக்கு அடுத்த நிலையில் இருக்கும் ஆமான் எங்களைக் கொல்லும்படி அரசரைக் கேட்டுக் கொண்டுள்ளான்.
3 ஆதலால் நீ கடவுளை மன்றாடி, அரசரிடம் பேசிச் சாவினின்று எங்களைக் காப்பாற்று" என்றார்.
4 மூன்றாம் நாள் எஸ்தர் தான் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து விட்டு, தன் அரச உடைகளை அணிந்தாள்.
5 இவ்வாறு அரச கோலத்தோடு, எல்லாவற்றையும் ஆள்பவரும் மீட்பவருமாகிய கடவுளை மன்றாடினாள். பின்பு இரண்டு தோழியரை அழைத்துக்கொண்டு போனாள்.
6 தன் மேனியின் மென்மையால் தன்னையே தாங்க முடியாதவள் போல் ஒரு தோழியின் மேல் சாய்ந்து கொண்டு நடந்தாள்.
7 மற்றத் தோழியோ தரை மட்டும் தொங்கிக் கொண்டிருந்த அரசியின் பின்தானையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு அவளைப் பின்தொடர்ந்தாள்.
8 எஸ்தர் செந்தாமரை முகத்தினளாய் ஒளிபடைத்த கண்ணினளாய்த் தோன்றினாள். அவளுடைய உள்ளமோ மாதுயரத்தாலும் பேரச்சத்தாலும் நிறைந்திருந்தது.
9 இந்நிலையில் எஸ்தர் எல்லா வாயில்களையும் ஒவ்வொன்றாய்க் கடந்து சென்று கடைசியிலே அரசன் அமர்ந்திருந்த கொலுமண்டபத்தை அடைந்தாள். பொன்னும், விலையுயர்ந்த முத்துகளும் ஒளிரும் அரச ஆடை அணிந்தவனாய் அரசன் தன் அரியணையில் வீற்றிருந்தான்.
10 அவனைப் பார்க்கவே பயமாய் இருந்தது. அப்பொழுது அவன் தலைநிமிர்ந்து கண்களில் கோபக் கனல் பறக்கப் பார்த்தான். அதைக் கண்ட அரசி அஞ்சி, முகம் வெளிறச் சோர்ந்து தன் தோழியின் மேல் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.
11 ஆனால் கடவுள் அரசனின் கல்நெஞ்சத்தை இளகச் செய்தார். எனவே, அவன் அச்சத்தோடு அரியணையினின்று குதித்தெழுந்து விரைந்து வந்தான். தன் கைகளில் அவளைத் தாங்கிக் கொண்டு அவள் மூர்ச்சை தெளியும் வரை அவளை இன்சொற்களால் தேற்றினான்.
12 எஸ்தர், இது என்ன? நான் உன் அண்ணன் அன்றோ? ஏன் அஞ்சுகிறாய்?
13 நீ சாகமாட்டாய்@ அந்தக் கட்டளை மற்றவர்களுக்காக விதிக்கப்பட்டதேயன்றி உனக்கன்று.
14 ஆகையால், அருகில் வா@ என் செங்கோலைத் தொடு" என்றான்.
15 அவள் பேசாதிருக்க, அரசன் பொற்செங்கோலைத் தானே பிடித்து அவள் கழுத்தின் மேல் வைத்து அவளை முத்தமிட்டான். "நீ ஏன் பேசாமல் இருக்கிறாய்?" என்று கேட்டான்.
16 அதற்கு அவள், "என் தலைவ, நீர் கடவுளின் தூதுவன் போல் தோன்றினீர். எனவே உமது மகிகையைக் கண்ட என் உள்ளம் அஞ்சி நடுங்கிற்று.
17 தலைவ, நீர் வியத்தகு அழகுள்ளவர்! உமது எழில் வதனத்தில் அருள் மிளிர்கின்றது" என்று சொன்னாள்.
18 இவ்வாறு பேசியவாறே மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள்.
19 அரசன் கலக்கமுற, அவனுடைய ஊழியர் அனைவரும் அவளைத் தேற்றினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஸ்தர் ஆகமம் - பழைய ஏற்பாடு, எஸ்தர், ஏற்பாடு, அரசன், பழைய, அவள், கொண்டு, ", மேல், ஆகமம், அவளை, அவளைத், திருவிவிலியம், தலைவ, உமது, நீர், அஞ்சி, கண்ட, தோழியின், போல், இவ்வாறு, எங்களைக், நான், அவன், ஆன்மிகம், கடவுளை