மருத்துவப் பேட்டி - கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை
- டாக்டர். காயத்ரி
சாதாரணமாகப் பெரும்பாலான பெண்கள் வெட்கத்தின் காரணமாக அல்லது வேறு காரணமாக கருப்பை மாதவிலக்குக் கோளாறுகள் நேரும்போது டாக்டரிடமோ தாயிடமோ அல்லது கணவரிடமோ வெளிப்படையாகக் கூறி ஆலோசனை கேட்பதில்லை. சிகிச்சை செய்து கொள்வதில்லை.
சிறுநீர்க் குழாயும் மலக் குடலும் பிறப்புறுப்பினருகில் இருப்பதால் அதில் நோய்த் தொற்று தோன்றினாலும் வெளியில் கூறாது மறைத்துக் கொள்வார்கள்.
இதற்குக் காரணம் சமூகத்தில் பெண்களை அவர்களது குறைகளை அசிங்கமாக நினைத்து ஒதுக்கி வைப்பதுதான். ஆணுக்குத் தலைவலி என்றால் எப்படியோ அப்படித்தான் பெண்ணின் மாதவிலக்குச் சமயங்களில் ஏற்படும் கோளாறுகளும் என்பதை உணர வேண்டும்.
நம்மை நோய்நொடியின்றி பலப்படுத்திக் கொள்வதும் தாழ்த்திக் கொள்வதும் நம் கையில்தான் உள்ளது. மன ரீதியாக ஆரோக்கிய ரீதியாக ஒழுக்க ரீதியாக வளர நமக்குள்ளே விழிப்புணர்வு தேவை.
எனவே பெண்கள் தாழ்வு மனப்பான்மையைத் தூக்கி எறிந்து விட்டுத் தங்களின் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசி முடிவு காணவேண்டும். ஏதாவது சிறு சந்தேகம் ஏற்பட்டால் கூட உடனுக்குடன் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. அசிங்கமான தன்மை எதுமில்லை.
சிறு வயதில் அல்லது பருவ வயதில் செய்த தவறுகள் அல்லது கவனிக்கப்படாதிருக்கும் சிறு கோளாறுகள் பின்னர் மணவாழ்வின் போது மலட்டுத் தன்மை உட்பட பலவித தீவிர பாதிப்புகளுக்கு ஆதாரமாக அமைந்து விடுகின்றன. இதற்கு பெரும்பாலும் அவர்கள்தான் காரணம் என்று கூறிவிட முடியாது.
அவர்கள் மீது பெற்றோர் காட்டும் அக்கறை வளர்க்கும் விதம்இ நண்பர்களுடன் பழகும் சூழ்நிலை போன்றவைதான் முக்கிய காரணங்களாகும்
பெண்கள் வயதுக்கு வரும் முன்னும் வந்த பின்னும் பெற்றோர் அவர்களை கவனமாகப் பாதுகாக்க வேண்டும். பெண்ணின் இனப்பெருக்க மண்டலத்தில் நிகழும் செயல்பாடுகளைத் தெரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். இது ஒன்றே மாதவிலக்கு மகளிர் நோய்கள் மற்றும் பேறுகாலப் ழீரச்சனைகளின் போது நல்லவிதமான அணுகுமுறையை மேற்கொள்ள அடிப்படையாக உதவும்.
எந்த நாட்டிலும் இளம்பெண்களுக்கு பூப்பெய்தும் செயல் இன்ன விதமாய் நிகழும் என்று முன்கூட்டியே பெற்றோரும் சரி பூப்பெய்திய தோழிகளும் சரிவரக் கூறவதில்லை, பூப்படைந்த பின்னரும் தோழியர் ஒருவரோடு ஒருவர் அதைப்பற்றிப் பேசுவதுமில்லை.
திடீரென்று எதிர்பாராத நேரத்தில் பூப்பெய்ததும் என்னவோ ஏதோவென்று பயந்து மனநோய்க்கு ஆளாகும் இளம் பெண்கள் இன்றும் உண்டு. இத்தகைய அறியாமையிலேயே அவர்களை ஆழ்த்தி வைத்திருக்கக் கூடாது.
ஆண்களிடம் இல்லாத தனிச் சிறப்புகளும் வித்தியாசமான அமைப்புகளும் தன்மைகளும் பெண்களிடம் இருப்பதால் அது பற்றி அவர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
முன்பெல்லாம் மாதவிலக்குக் காலங்களில் மங்கையரை தீண்டத்தகாதவர் அசுத்தமானவர்கள் என்று குறிப்பிட்டு அன்றாட வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைக் கடைப்பிடிக்கச் செய்தனர்.
இதுபோன்ற ஆசார முறைகளைப் பலவந்தப்படுத்துவதால் சிலருக்கு சூதக வலி போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. எனினும் இந்த ஆசார முறைகளில் சில நல்ல பலனைத் தருவதற்காக ஏற்பட்டவைதாம்.
பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பெண்கள் பூப்பெய்தி விடுவர். பூப்பெய்திய நாள் முதற்கொண்டு குறைந்தது ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை மாதவிலக்குச் சீராக வருகிறதா என்று தாய் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு மேக உஷ்ணத்தால் வெள்ளைப்படலாம்.
இதை அவர்கள் வெட்கத்தின் காரணமாக தாயிடம் சொல்லாமல் விட்டு விட்டால் நாளடைவில் அதுவே கருப்பைக் கட்டி மற்றும் கருப்பைக் கோளாறுகளுக்கு மூலகாரணமாக அமைந்து விடும். இதனால் பிற்காலத்தில் கருத்தரிக்கின்ற வாய்ப்பையும் அவர்கள் இழக்க நேரிடும்.
பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்துக்களி புழுங்கலரிசிக் கஞ்சி கேழ்வரகு அடை முருங்கைக்கீரை போன்றவற்றை அச்சமயங்களில் கட்டாயம் சாப்பிடச் சொல்வது சொல்வது நம் முன்னோரின் வழக்கம். இதனால் கருப்பை சுத்தம் பெறும்இ இடுப்பு எலும்புகளில் வலிமைப்படும். கரு முட்டை சீராக உருவாகவும் கருப்பை சீராக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. கருப்பையில் அசுத்தம் சேர்ந்து சிறு சிறு கட்டிகள் அல்லது கிருமிகள் சேருமானால் அவ்வப்போது அவற்றை வெளியேற்றச் செய்வர்.
அரச மரத்தைச் சுற்றி வந்து சில நிமிடங்கள் அதன் நிழலில் அமர்ந்த தியானம் செய்வர். இதன் நோக்கம் அரச மரத்தடியில் அமர்ந்தால் கருப்பைக் கோளாறுகள் வரா கருத்தரிப்பில் தடை ஏதும் இராது என்ற நம்பிக்கை. உண்மையில் சித்த மருத்துவ விதிப்படி ஆலமரம். வேம்பு புங்கமரம். நெல்லி மற்றும் அரச மர நிழல்களும் அவற்றின் காற்றும் நம் மூச்சுவழி ரத்தத்தில் கலந்து நுரையீரல் கருப்பையில் சேரும் கிருமிகளை அழித்து தூய்மைப்படுத்துகின்றன.
பெண்கள் தங்களின் பிறப்புறுப்புகளைச் சுத்தமாகச் சுகாதாரமாக வைத்துக் கொள்ளாததால் பல்வேறு கருப்பைக் கோளாறுகளுக்கு இரையாகிறார்கள்.
பொதுவாக மாதவிலக்கு ஏற்பட்ட பெண்கள் இந்த நவீன காலத்திலும் மாதக் கணக்கில் ஆண்டுக்கணக்கில் பயன்படுத்திய துணிகளையே துவைத்துத் துவைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதிலுள்ள நுண்கிருமிகள் பிறப்புறுப்பில் நோய் ஏற்படக் காரணமாகி மலட்டுத்தன்மை உள்பட இன்னபிற நோய்கள் தோன்றச் செய்து விடுகின்றன.
இது போன்ற காலங்களில் பயன்படுத்தத் தற்போது நிறைய புதுப்புதுச் சாதனங்கள் கடைகளில் கிடைக்கின்றன. எனினும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற இந்தச் சாதனங்களை நம் நாட்டுப் பெண்களில் பலர் பயன்படுத்துவதில்லை. இதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று தெளிவின்மை மற்றொன்று அவற்றின் அதிக விலை.
இவை போன்றவற்றைப் பயன்படுத்த விரும்பாதவர்கள் அல்லது இயலாதவர்கள். மிகவும் குறைந்த விலையில் விற்கும் நூல் புடைவைக் வாங்கி துண்டுகளாக்கி அதன் நடுவில் பஞ்சுப் பொதியை வைத்துப் பயன் படுத்தலாம். ஒரு முறை பயன்படுத்திய பின் அவற்றை எறிந்து விடலாம். குறைந்த விலையிலான ஒரு புடைவையை ஆறு மாதங்கள் வரை கூடப் பயன்படுத்த முடியும். அல்லது வீட்டில் உபயோகித்த பருத்திப் புடைவைகளைக் கூட டெட்டாலினால் சுத்தம் செய்து மேற்கூறியபடி உபயோகிக்கலாம்.
ஆணும் பெண்ணும் கலந்துரையாடியபடி இன்பம் அனுபவிப்பதன் பயனாகத்தான் பெண் கருத்தரிக்கிறாள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அடிப்படை உண்மையும் அதுதான். ஆனால் ஆண், பெண் சேர்க்கையினால்தான் கருதரிக்கிறது என்பது வயது வந்த சிலருக்குத் தெரியாமலே கூட உள்ளது.
அதே போல் கருத்தரித்தலுக்குப் பின் நடைபெறும் செயல்கள் பற்றிய நுணுக்கமான தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கும் பெண்களும் நம் நாட்டில் மிகக் குறைவு.
நமது பெண்களுக்கு முக்கியமாகத் தெரிய வேண்டியவை ஆண் பெண் உடல் அமைப்பு பாலுறுப்புகளின் செயல்பாடுகள் சேர்க்கை விளக்கம் கருவுற்ற காலத்தில் எப்படி இருக்க வேண்டும்? குழந்தை பிறப்புக்குப் பின் தாயும் சேயும் தம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? எத்தனை காலத்திற்குப் பின் அடுத்த கர்ப்பத்திற்கு இடம் தர வேண்டும்? போன்றவையாகும்.
அயல் நாடுகளில் ஆண் பெண் உடற்கூறு உடலுறவு நடவடிக்கைகள் குழந்தைப் பேறு போன்றவை பற்றிய அறிவை ஆணும் பெண்ணும் சிறிதளவாவது கொண்டுள்ளனர். அதன் காரணமாகத்தான் அங்கு குழந்தை பிறப்புவிகிதம் கருச்சிதைவு கருக்கலைப்பு போன்றவை மிக மிகக் குறைவு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - பெண்கள், அல்லது, வேண்டும், சிறு, கருப்பைக், கோளாறுகள், பெண், பின், சீராக, இதனால், ரீதியாக, காரணமாக, கருப்பை, செய்து, பூப்பெய்திய