மருத்துவப் பேட்டி - நெருஞ்சில்!

- டாக்டர் ஜே. ஜான்சன்
இது தரையில் படரும் ஒரு வகை முட்செடி. முட்கள் மாட்டின் கொம்பைப் போன்று பிரிவுடையது. பூக்கள் மஞ்சள் நிறத்திலிருக்கும். இதில் சிறு நெருஞ்சில், பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில் என்னும் பிரிவுகளும் உண்டு. நெருஞ்சிலுக்கு யானை வணங்கி என்ற பெயரும் உண்டு.
துவர்ப்பும், இனிப்பும் கலந்த சுவையுடையது. இதனால் சொட்டு நீர், சுர வெதும்பல், கல்லடைப்பு, நீரடைப்பு, முட வாயு, வெள்ளை, சிறுநீர் எரிச்சல், முக்குற்றம், நீர் வேட்கை, வெப்பம் நீங்கும்.
நெருஞ்சில் விதை:
சிறுநீர்க்கட்டு, சிறுநீர் எரிச்சல், சதையடைப்பு, கல்லடைப்பு நீங்கும்.
இதனால் மேகம், வெண்புள்ளி, கல்லடைப்பு, எலும்புருக்கி நோய், உடம்பெரிச்சல், நீர் வேட்கை, அழல் முதலியன தீரும்.
முப்பிணி, வெப்பம், வெண்ணீர் நோய் தீரும்.
இதன் காய், வேரை பச்சரிசியோடு வேகவைத்து கஞ்சியை வடித்துச் சர்க்கரை சேர்த்து வெள்ளை, நீர் கடுப்புக்கு கொடுப்பது வழக்கம். நசுக்கிய நெருஞ்சில் காய் 68 கிராம், கொத்தமல்லி விதை 8 கிராம், நீர் 680 கிராம் இவைகளை நேர் பாதியாக சுண்ட வைத்து வடிகட்டி 40 மில்லி வீதம் தினமும் இருவேளை கொடுத்துவர நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, நீர் எரிச்சல் நீங்கும். இதன் விதை நீரைப் போக்கும். இதர சரக்குகளும் சேர்த்து தரலாம்.
விதை 103 கிராம் வால் மிளகு, சிறு நாகப்பூ, ரேவல் சின்னி, வெடியுப்பு வகைக்கு 35 கிராம் இவைகளை நன்றாகப் பொடி செய்து வைத்துக் கொண்டு இதில் ஒரு கிராம் கொடுத்து வர நோயோடு கூடிய வீக்கங்கள் நீங்கும்.
காயோடுகூடிய செடியை இடித்து வெள்ளாட்டுப் பாலில் ஊறவைத்துப் பிழிந்து வடிகட்டி தேன் சேர்த்துக் கொடுக்க ஆண் தன்மைப் பிறக்கும். நெருஞ்சில் பத்து, லவங்கப்பட்டை-5, ஏலக்காய்-6, சர்க்கரை பத்துப் பங்கு இவற்றைச் சேர்த்து தூளாக்கி ஒரு கிராம் இரும்புச் செந்தூரத்தோடு தர, காமாலை நோய் நீங்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நெருஞ்சில்! - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - கிராம், நீர், நெருஞ்சில், நீங்கும், கல்லடைப்பு, விதை, சேர்த்து, நோய், எரிச்சல்