மருத்துவப் பேட்டி - ஆண்மையின்மையை குணப்படுத்தும் தாவரம்

கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளில் காட் பிளான்ட் என்ற செடி பயிரிடப்படுகிறது. இந்த செடியின் இலைகளில் உள்ள வேதிப்பொருட்கள் ஆண் விந்தணுக்கள் செயல்பாட்டை அதிகரித்து மலட்டுத்தன்மையை போக்குவதாக ஆராய்ச்சியில் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்த வேதிப்பொருட்களை எலிகளுக்கும், ஆண் விந்தணுக்கள் மீதும் பயன்படுத்திப் பார்த்த போது, கருமுட்டையுடன் இணைந்து கருவை உருவாக்கும் இறுதிக் கட்ட நிலைக்கு விந்தணுக்களை தூண்டி விடுவது தெரிய வந்தது. கருவுறாத முட்டைகளுடன், எலிகளின் விந்தணுக்களை இந்த குறிப்பிட்ட வேதிப்பொருளைக் கொண்டு சிகிச்சை அளித்த போது விந்தணுக்களால் கருமுட்டையை கருவுறச் செய்ய முடிந்தது. இதுபோன்று சிகிச்சை பெறாத விந்தணுக்களை காட்டிலும் இது படு ஸ்பீடாக இருந்தது.
இந்தச் செடியின் இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூயிங்கத்தை மெல்லும் போது கேத்தினோன் என்ற ஒரு வேதிப்பொருள் விடுவிக்கப்படுகிறது. இது நமது உடலில் புகுந்ததும் கேத்னி, நோர்பெட்ரைன் என்ற 2 பொருட்களாக பிரிகிறது. இந்த 2 பொருட்களும் வேறு எதுவும் அல்ல. விந்தணுக்கள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிபிஏ என்ற பிரிவைச் சேர்ந்த வேதிப்பொருட்கள் தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆண்மையின்மையை குணப்படுத்தும் தாவரம் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - விந்தணுக்களை, போது, விந்தணுக்கள்