இறால்
தேவையான பொருள்கள்:
உரித்த இறால் - 500 கிராம்
தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி
மிளகாய் வற்றல் விழுது - 1 மேஜைக் கரண்டி
மோனோ சோடியம் குளுடோமேட்
கார்ன்ஃபிளோர் - 4 மேஜைக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 1/2 மேஜைக்கரண்டி
முட்டையின் வெள்ளைப்பகுதி - 1
உப்பு - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 4 மேஜைக்கரண்டி
எண்ணெய் - 1 லிட்டர்
செய்முறை:-
முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், 1/2 தேக்கரண்டி உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும். அந்தக் கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும். தக்காளி சாஸ், சைனீஸ் உப்பு, மீதமுள்ள கார்ன் ஃபிளோர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் வற்றல் விழுது ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். தேவையான அளவு எண்ணெயை சூடாக்கி, ஊர வைத்த இறாலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 3 மேஜைக்கரண்டி, எண்ணெயை சூடாக்கி, தக்காளி சாஸ் கலவையை 1 நிமிடம் வதக்கவும். இதில் இறாவைக் கலந்து மேலும் 5 நிமிடம் வதக்கவும். இறால் ரெடி!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 40 | 41 | 42 | 43 | 44 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இறால், 65 வகையான உணவுகள், 65 Type Recipes, மேஜைக்கரண்டி, விழுது, நிமிடம், உப்பு, சாஸ், தக்காளி, Recipies, சமையல் செய்முறை