மீன் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
மீன் (முள் நீக்கியது) - 1 கிலோ
இஞ்சி - 125 கிராம்
பூண்டு - 125 கிராம்
கடுகு - 60 கிராம்
மஞ்சள் பொடி - 1 மேஜைக்கரண்டி
சர்க்கரை - 1 கோப்பை
வினிகர் - 400 கிராம்
மிளகாய் வற்றல் - 60 கிராம்
சீரகம் - 35 கிராம்
உப்பு - 2 மேஜைக்கரண்டி
கடலை எண்ணெய் - 1/2 கிலோ
மிளகாய்தூள் - 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
மீனை ஒரு அங்குல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். உப்பு மிளகாய்த்தூள் தடவி 1 மனி நேரம் ஊர வைக்கவும். எண்ணெயை நன்றாக சூடாக்கி மீன் துண்டுகளை பொறித்தெடுக்கவும். இஞ்சி, பூண்டு காய்ந்த மிளகாய், சீரகம், கடுகு ஆகியவை விழுதாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி அரைத்த மசாலாவை நன்றாக வதக்கவும். மீன் வினிகர், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து எண்ணெய்பிரியும் வரை சமைக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 64 | 65 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மீன் ஊறுகாய், 65 வகையான உணவுகள், 65 Type Recipes, கிராம், மேஜைக்கரண்டி, மீன், Recipies, சமையல் செய்முறை