மைதா மாவு தோசை

தேவையானவை: மைதா மாவு - 1 கப், பச்சரிசி மாவு - முக்கால் கப், உப்பு - தேவையான அளவு, சின்னவெங்காயம் - 15, பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன், கடுகு - அரைடீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், மிளகு - 10, கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, எண்ணெய் - (தோசைசுடுவதற்கும், தாளிப்பதற்கும்) தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை சிறு வளையங்களாக நறுக்கவும்.மிளகை உடைத்துக்கொள்ளவும். மைதா, பச்சரிசி மாவு, உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து ரவா தோசைக்குகரைப்பதுபோல் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, சீரகம்,மிளகு போட்டு தாளித்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில்கொட்டவும். அத்துடன் மல்லித்தழை சேர்த்து கலக்கவும்.சூடான தோசைக் கல்லில் மாவை எடுத்து அள்ளித் தெளித்த மாதிரி தோசையாக ஊற்றி எண்ணெய் விட்டு,ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பிவிட்டு எண்ணெய் விட்டு நன்றாக மொறுமொறுப்பாக சிவக்க வெந்ததும்எடுக்கவும். வரமிளகாய் சட்னியுடன் இந்த தோசையை சாப்பிட்டால், சூப்பரோ சூப்பர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மைதா மாவு தோசை, 30 வகையான தோசை, 30 Type Dosa, எண்ணெய், சேர்த்து, விட்டு, டீஸ்பூன், பச்சை, மாவு, Recipies, சமையல் செய்முறை