உருளைக்கிழங்கு போண்டா
தேவையானவை: கடலை மாவு - 1 கப், ஆப்ப சோடா - 1 சிட்டிகை, ஆரஞ்ச் ரெட் கலர் (விருப்பப்பட்டால்)- 1 சிட்டிகை, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு. (மசாலாவுக்கு) உருளைக்கிழங்கு -கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை- சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள் ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசியுங்கள். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயைப்பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், இஞ்சி,பச்சை மிளகாய், மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். வெங்காயம் வதங்கியதும் மசித்தஉருளைக்கிழங்கை சேர்த்து, அதனுடன் கறிவேப்பிலை, மல்லித்தழை, எலுமிச்சம் பழச் சாறு, தேவையான உப்புசேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வையுங்கள்.பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால்தன்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, உருளைக்கிழங்குமசாலா உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போடுங்கள். எண்ணெய் கொள்ளுமளவுபோட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
உருளைக்கிழங்கு போண்டா, 30 வகையான போண்டா வடை, 30 Type Bonda Vadai, உப்பு, வெங்காயம், சேர்த்து, டீஸ்பூன், பச்சை, எண்ணெய், இஞ்சி, Recipies, சமையல் செய்முறை