முட்டாள் சிரிப்புகள் - நேர்மையான கடைக்காரர்
ஒருவன் பொருள்களை வாங்குவதற்காகப் பல கடைகளுக்குச் சென்றான். எங்கே குடையை வைத்து விட்டோம் என்பது அவனுக்கு மறந்து விட்டது. ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினான்.
கடைசியாக ஒரு கடைக்காரர் குடையை அவனிடம் தந்தார்.
"இந்த ஊர்லேயே நீங்க ஒருத்தர் தான் நேர்மையானவர். என் குடையை திருப்பிக் கொடுத்திட்டீங்க. மற்றவர்கள் எல்லாம் அயோக்கியர்கள். நான் குடையைக் கடையில் விட்டுட்டுப் போகவே இல்லை என்று சொன்னார்கள்" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நேர்மையான கடைக்காரர் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, குடையை