முட்டாள் சிரிப்புகள் - அதே தரம்!
அதே தரம்
ஒரு கடையில் எழுதியிருந்த விளம்பரம் : நாங்கள் விற்ற எந்தப் பொருளும் சரியில்லை என்றால் எங்களிடம் திருப்பித் தந்து விடலாம். அதற்குப் பதிலாக அதே தரமுள்ள பொருளைப் பெற்றுக் கொள்ளலாம்.
கட்டிலைத் துறந்தவன்
கட்டிலின் மேல் படுத்தபடியே பலர் இறந்து இருக்கின்றனர் என்று கேள்விப்பட்டான் அவன். அன்றிலிருந்து கட்டிலில் படுப்பதை விட்டுவிட்டான்.
காலண்டர் வாங்கும் காரணம்
அவன் 1997 ஆம் ஆண்டு காலண்டர்களை ஆயிரக் கணக்கில் மிகக் குறைந்த விலைக்கு வாங்கினான்.
எதற்காக என்று நண்பன் கேட்டதற்கு, மீண்டும் 1997 ஆம் ஆண்டு வருமானால் இதை விற்று நான் நிறைய லாபம் சம்பதித்து விடுவேன் என்றான்.
பதில் எழுதும் முறை
ஒருவன் எழுதிய கடிதத்தின் கடைசி வரி, இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்காவிட்டால் உடனே எனக்கு மடல் எழுது.
நல்ல ஐயம்
ஏன் இந்த நெருப்புக் குச்சி இப்ப எரிய மாட்டேங்குதுன்னு தெரியலியே. போன தடவை பத்தவச்ச போது நன்றாக எரிந்ததே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அதே தரம்! - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,