முட்டாள் சிரிப்புகள் - எப்படி அழைப்பது?
மனோதத்துவ டாக்டரிடம் வந்த ஒருவன் "டாக்டர்! எப்பவும் நான் பரபரப்பாக இருக்கிறேன். உள்ளத்திலே அமைதியே இல்லை" என்றான்.
அவனை நன்கு பரிசோதித்த டாக்டர், "கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு நோயும் இல்லை. யார் யார் எரிச்சல் உண்டாக்குகிறார்களோ அவர்களை விட்டுச் சிறிது காலம் விலகி இருங்கள். எல்லாம் சரியாகி விடும். வாரத்திற்கு ஒருமுறை என்னை வந்து பாருங்கள்" என்றார்.
இரண்டு வாரம் கழிந்தது. அவன் வந்து டாக்டரைப் பார்க்கவில்லை. என்ன ஆயிற்றோ என்ற கவலையில் அவனுக்குப் போன் செய்தார் டாக்டர்.
"நீங்கதானே டாக்டர் எரிச்சல் ஏற்படுத்தறவங்களைக் கொஞ்ச காலம் பார்க்க வேண்டாம் என்று சொன்னீர்கள். உங்களை விட யாரும் எனக்கு அதிக எரிச்சல் தருவதாகத் தெரியவில்லை. அதனால்தான் பார்க்க வரவில்லை" என்று பதில் வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எப்படி அழைப்பது? - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, டாக்டர், எரிச்சல், "