முட்டாள் சிரிப்புகள் - ஆணியால் குழப்பம்
இரண்டு தச்சர்கள் வீடு கட்டும் வேலையில் இருந்தனர். அவர்களில் ஒருவன் தன் உதவியாளனை அழைத்து "அந்த அறைக்குச் சென்று சுவற்றில் அடிக்கப் பத்து ஆணி கொண்டு வா" என்றான்.
போன உதவியாளன் திரும்பவே இல்லை. அறைக்குள் கோபத்துடன் நுழைந்த தச்சன், "பத்து ஆணி எடுத்து வர இவ்வளவு நேரமா?" என்று கத்தினான்.
"நீங்க வலது பக்கச் சுவரிலே அடிக்க ஆணி கேட்டீங்க. இங்கே இருப்பது எல்லாம் இடது பக்கச் சுவரில் அடிக்கும் ஆணி. எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை?" என்றான் உதவியாளன்.
அந்த ஆணிகளை எல்லாம் பார்த்த தச்சன், "முட்டாளே! இது மறு பக்கத்துச் சுவரிலே அடிக்க வேண்டிய ஆணி" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆணியால் குழப்பம் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ", என்றான்