புகழ்பெற்ற சிரிப்புகள் - திட்டினாலும் தப்பிக்கலாம்
ஒரு விழாவில் சிறிது தொலைவில் தன் தலைமையாசிரியரை பார்த்து விட்டான் சிறுவன் ஒருவன். தன்னை முன் பின் அறிந்திராத பக்கத்திலிருந்த சிறுவனிடம் ...
அதோ வருதே, அந்த கிழத்தைப் பார்த்தியா? என்ன அவலட்சணமான உருவம். எங்க பள்ளியிலேயே எல்லோரும் வெறுக்கும் ஒரே ஆள் அந்தக் கிழம் தான், என்றான்.
உடனே அந்தச் சிறுவன், நான் யார் தெரியுமா? நீ திட்டற அந்த ஆளோட ஒரே மகன், என்றான்.
என்னை யார்னு தெரியுமா? என்று எச்சிலை விழுங்கிக் கொண்டே அச்சத்துடன் கேட்டான் சிறுவன்.
தெரியாது.
அப்பாடா! தப்பித்தேன், என்று ஓட்டம் பிடித்தான் அவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திட்டினாலும் தப்பிக்கலாம் - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, சிறுவன்