புகழ்பெற்ற சிரிப்புகள் - சரியான வாழ்த்து

திருமண விழாவில் பேச வந்த பெரியவர், "மணமகனே! நீ உண்மையில் மகிழ்ச்சி அடைய வேண்டிய பொன்னாள் இது. இன்றுதான் நீ வாழ்க்கைத் தொல்லைகளின் எல்லைக்கு வந்து இருக்கிறாய்" என்று வாழ்த்தி முடித்தார்.
ஓராண்டு கழிந்தது. அந்தப் பெரியவரைத் தற்செயலாகச் சந்தித்த மணமகன், "ஐயா! என்ன சொன்னீர்கள்? தொல்லைகளின் எல்லைக்கு வந்து விட்டேன் என்று வாழ்த்தினீர்களே, என் வாழ்க்கை இப்பொழுது கொடிய நரகமாக உள்ளது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்று வெடித்தான்.
"நான் தொல்லைகளின் எல்லை என்று சொன்னேனே தவிர எந்த எல்லை என்று சொன்னேனா?" என்று கேள்வி கேட்டார் அவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சரியான வாழ்த்து - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ", தொல்லைகளின்