புகழ்பெற்ற சிரிப்புகள் - நள்ளிரவில் நேரம் தெரிய

இரண்டு பையன்கள் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து விட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
இப்பொழுது நேரம் என்ன இருக்கும்? என்று கேட்டான் ஒருவன்.
அடுத்தவன், இரவு இரண்டு மணி இருக்கும் என்றான்.
இல்லை! மூன்று மணியாவது இருக்கும் என்றான் முதலாமவன்.
சரியான நேரத்தை எப்படித் தெரிந்து கொள்வது என்று இருவரும் சிந்தித்தனர். தெருவிலோ ஆள் நடமாட்டமே இல்லை.
இருவரும் ஓர் வீட்டின் எதிரில் நின்று உரத்த குரலில் பாடத் தொங்கினார்கள்.
சிறிது நேரத்தில் அந்த வீட்டு மேல் மாடியிலிருந்து ஒரு பெரியவர் "டேய்! பசங்களா, மணி இரண்டரை ஆகுது இல்ல. நாங்கள்ளாம் தூங்க வேண்டாமா? ஏன் இப்படிச் சத்தம் போட்டுப் பாடுகிறீர்கள்?" என்று கத்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நள்ளிரவில் நேரம் தெரிய - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, இருக்கும்