புகழ்பெற்ற சிரிப்புகள் - அழகு தருவது எது?
பெரிய மனிதர்கள் கூடியிருந்த கூட்டத்தில் திடீரென்று, "பெண்களுக்கு அழகும் கவர்ச்சியும் தருவது எது" என்ற பேச்சு எழுந்தது.
"பெண்ணினுடைய உதடுகள்" என்றார் ஒருவர்.
"இல்லவே இல்லை. அவளுடைய கூந்தல்தான்" என்றார் இன்னொருவர்.
அங்கிருந்த ஒரே பெண்மணி எழுந்து வெளியே செல்லத் தொடங்கினாள்.
"நீங்கள் எதற்காக வெளியே செல்கிறீர்கள்?" என்று அவளைக் கேட்டார் ஒருவர்.
"உங்களில் யாராவது ஒருவர் உண்மையைச் சொல்லி விடுவீர்கள்" என்று வெட்கத்துடன் சொன்னாள் அவள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அழகு தருவது எது? - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ", ஒருவர்