புகழ்பெற்ற சிரிப்புகள் - டிக்கட் வாங்காததற்காகக் கொலை
ரயில் வண்டியில் டிக்கட் வாங்காமல் ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்தான்.
அந்தப் பெட்டியில் ஏறிய டிக்கட் பரிசோதகர் அவனிடம் "டிக்கட்" என்று கேட்டார்.
சட்டைப் பைகளில் டிக்கட்டைத் தேடுவது போல நடித்தான் அவன்.
சிறிது நேரத்திற்குப் பிறகு "நான் டிக்கட் வாங்கினேன். எங்கேயோ தொலைந்து விட்டது" என்றான்.
கோபம் கொண்ட பரிசோதகர் "என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்?" என்று கத்திக் கொண்டே அவன் வைத்திருந்த
பெரிய பெட்டியைத் தூக்கி வெளியே எறிந்தார்.
"நான் டிக்கட் வாங்கவில்லை என்பதற்காகப் பெட்டிக்குள் இருந்த என் மகனை நீங்கள் கொலை செய்யலாமா?" என்று அலறினான் அவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
டிக்கட் வாங்காததற்காகக் கொலை - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ", டிக்கட், அவன்