முல்லாவின் கதைகள் - விதிக்கு விளக்கம்
ஒரு பெருந்தனக்காரரின் வீட்டில் அமர்ந்து முல்லா அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
செல்வந்தருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்து விட்டது
" முல்லா அவர்களே விதி என்று மனிதர்கள் கூறுகிறார்களே அது என்ன?" என அவர் கேட்டார்.
" நாம் எதிர்பார்ப்பது நடக்காதபோது அதற்கு விதி என்று பெயரிட்டு அழைக்கிறோம் " என்றார் முல்லா.
செல்வந்தருக்கு முல்லாவின் விளக்கம் சரியாகப் புரியவில்லை.
" இன்னும் சற்று தெளிவாக இதைப் பற்றிச் சொல்லுங்களேன் " எனச் செல்வந்தர் கேட்டுச் கொண்டார்.
முல்லா உடனே " என் அருமை நண்பர் அவர்களே! முதலில் நான் உங்களை எதற்காச் சந்திக்க வந்தேனோ அந்த விஷயத்தைக் கூறி விடுகிறேன். அப்புறம் விதியைப் பற்றி தெளிவாக விளக்குகிறேன் " என்றார்.
" எதற்காகச் சந்திக்க வந்தீர்?" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.
" எனக்கு ஒரு கோடிப் பொன் கடனாக வேண்டும் உங்களைக் கேட்டுப் பெறலாம் என்றுதான் வந்தேன் " என்றார் முல்லா.
செல்வந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு பெரிய தொகை எதற்காக? என்று விளங்காமல் திகைத்தார்.
" நான் கேட்டது என்ன ஆயிற்று?" என்று முல்லா கேட்டார்.
" இவ்வளவு பெரிய தொகையைத் திடீரென்று கேட்டால் எப்படி?" என்றார் செல்வந்தர் தயக்கத்துடன்.
முல்லா சிரித்துக் கொண்டே " உம்மிடம் கடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிகையுடன் உங்களை நான் சந்தித்தேன் உங்களால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை அப்போது எனக்கு ஏற்படுகிற ஏமாற்றம் இருக்கிறதே அதை விதி என்று எண்ணி மனம் சமாதானம் அடையலாம் " என்று விதிக்கு விளக்கம் தந்தார் முல்லா.
பிறகு முல்லா சொன்னார் " நான் விளையாட்டுக்காகத்தான் உமம்மிடம் கடன் கேட்டேன் நீர் குழப்பமடைய வேண்டாம் " எனக் கூறிச் சிரித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விதிக்கு விளக்கம் - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - முல்லா, என்றார், செல்வந்தர், செல்வந்தருக்கு, விளக்கம், கேட்டார்