முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » நீதிக் கதைகள் » முல்லாவின் கதைகள் » முல்லாவிடம் இருந்த சக்தி
முல்லாவின் கதைகள் - முல்லாவிடம் இருந்த சக்தி
தற்பெருமை பேசுவார்களை கண்டால் முல்லாவுக்கு பிடிக்காது. அவர்களை எவ்விதமாவது
மட்டந்தட்ட அவர் முயற்சி செய்வார்.
ஓரு தடவை ஒரு மதச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வெளிநாட்டில் இருந்து மதத் தலைவர்கள் சிலர் வந்திருந்தார்கள்.
அவர்கள் மக்கள் மத்தியில் சொற்பொழிவாற்றும் போது மதத்தைப் பற்றியோ கடவுளைப் பற்றியோ அதிகம் பேசமால் தங்களுக்கு அதிசய சக்திகள் உண்டு என்றும் தாங்கள் விரும்பினால் நீரில் நடக்க முடியும், நெருப்பில் புகுந்து வெளிவர முடியும், மணலைக் கயிறாக திரிக்க முடியும் என்றும் அவர்கள் புராணத்தை தம்பட்டமடித்தே காலத்தை ஒட்டினர். கடைசியாக நன்றி கூறுவதற்காக வந்த முல்லா தனக்கும் சில கச்திகள் உண்டு என்றும் குறிப்பாக நல்ல இருளில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வழிநடக்க முடியும் என்றும் கூறினார்.
" விளக்கே இல்லாமல் அடர்ந்த காட்டில்கூட நல்ல இருளில் முல்லாவால் நடந்து செல்ல முடியுமா?" என்று மதத்தலைவர்கள் கேட்டனர்.
" முடியும் " என்று முல்லா கூறினார்.
அன்று இரவு உணவுக்குப் பிறகு, முல்லாவின் அந்த சிறப்பு ஆற்றலைப் பரிசோதனை செய்து பார்ப்பது என்று முடிவாயிற்று.
மதத் தலைவர்களும் உள்ளுர் பிரமுகர்கள் சிலரும் காட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஆங்காங்கே நின்று முல்லாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அன்று உண்மையிலேயே இருள் மிகவும் அதிகமாக இருந்தது. மிகவும் அருகில் இருக்கும் பொருள் கூட கண்களில் படவில்லை.
குறுக்கும் நெடுக்;குமாக நிற்கும் மரங்களை அடையாளம் கண்டு முல்லா எவ்வாறு இருளில் வருகிறார் என்று பார்க்க எல்லோரும் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். சற்றநேரம் கழித்து முல்லா ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு நடந்து வந்தார்.
" இது என்ன? கைவிளக்கு வெளிச்சத்தில் நடந்து வருகிறீர், இருளில் அல்வா நடப்பதாக சவால் விட்டீர் " என்று மற்றவர்கள் கேட்டனர்.
" நண்பர்களே, எவ்வளவு பயங்கர இருளாக இருந்தாலும் எனக்குக் கண் நன்றாகத் தெரியும், ஆனால் நடந்து வருவது நான்தான் என்று உங்களுக்கெல்லாம் தெரிய வேண்டாமா? எனக்குப் பதிலாக வேறு ஆளை நடக்க விட்டு நான் உங்களை ஏமாற்றி விட்டேன் என்ற அவப்பெயர் நாளை வரக்கூடாதல்லாவா? அதனால் என்னை நீங்கள் அடையாளம் கண்டுபிடிப்பதற்காகத்தான் கைவிளக்குடன் நடந்து வந்தேன் " என்றார் முல்லா.
பிறகு முல்லா " அன்பார்ந்த மதத் தலைவர்களே உங்களிடமெல்லாம ஏதேதோ அமானுஷ்ய சக்தி இருப்பதாகத் கூறினீர்களே அதற்கு என் சக்தி ஒன்றும் இளைத்ததல்ல" என்றார் முல்லா தங்களை மட்டம் தட்டவே இப்படி ஒரு நாடகத்தை முல்லா ஆடினார் என்பதை மதத் தலைவர்கள் உணர்ந்து கொண்டனர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முல்லாவிடம் இருந்த சக்தி - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - முல்லா, நடந்து, முடியும், என்றும், இருளில், முல்லாவின்