முல்லாவின் கதைகள் - கீழே விழுந்த சட்டை
ஒரு நாள் முல்லா தமது மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையலறையில் அவர்
மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார்.
மாடியிலிருந்த முல்லா திடீரெனக் கால் தவறிக் கீழே விழுந்து விட்டார்.
தடால் என்ற சப்தத்துடன் எதோ ஒன்று கீழே விழுந்த சப்தத்தைக் கேட்ட மனைவி திடுக்கிட்டு அது என்ன சப்தம் என்று கேட்டாள்.
கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு ஒள்றுமில்லை மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார்.
ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது? என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா கமாளித்தார். அவர் மனைவிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கீழே விழுந்த சட்டை - முல்லாவின் கதைகள் - Moral Stories - நீதிக் கதைகள் - முல்லா, விழுந்து, விழுந்த