கிரேக்கப் படையெடுப்புகள்
அலெக்சாண்டர் படையெடுப்பின்போது அரசியல் நிலை
பாரசீகர்கள் படையெடுத்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு மாசிடோனியாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் இந்தியானின்மீது படையெடுத்தார். அவரது படையெடுப்பின்போது வடமேற்கு இந்தியாவில் பல சிறு அரசுகள் இருந்தன. தட்சசீலத்து அம்பி, அபிசார நாட்டு அரசன், ஜீலம், சீனாப் நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்த போரஸ் போன்ற முதன்மையான அரசர்கள் இப்பகுதியில் ஆட்சி புரிந்தனர். நிசா போன்ற பல குடியரசு நாடுகளும் இருந்தன. இந்தியாவின் அரசியல் ஒற்றுமை குறைந்த பகுதியாக வடமேற்கு இந்தியா விளங்கியதோடு, ஆட்சியாளர்களும் தங்களுக்கிடையே போரிட்டுக் கொண்டிருந்தனர். பொது எதிரியை வீழ்த்துவதற்குக்கூட அவர்கள் ஒன்று சேரவில்லை. இருப்பினும், பல்முனை எதிர்ப்புகளை வெற்றிகொள்வது என்பது அலெக்சாண்டருக்கு எளிதாக இருந்தது என்று கூறமுடியாது.
படையெடுப்புக்கான காரணங்கள்
அலெக்சாண்டர் |
ஹைடாஸ்பஸ் போர்
கி.மு. 327 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் இந்துகுஷ் மலைகளைக் கடந்து, கிட்டத்தட்ட எட்டுமாத காலம் அங்கிருந்த பழங்குடிகளிடம் போரிட்டார். கி.மு. 326ல் அவர் படகுப்பாலம் அமைத்து சிந்து நதியைக் கடந்தார். தட்சசீலத்து அம்பி அவரை அன்புடன் வரவேற்றார். அங்கிருந்துகொண்டே, போரஸ் மன்னரை சரணடையுமாறு கோரினார். ஆனால், போரஸ் அதற்கு உடன்படாமல் போரிடுவதற்கு தயாரானார். பின்னர், அலெக்சாண்டர் தட்சசீலத்திலிருந்து புறப்பட்டு ஹைடாஸ்பஸ் (ஜீலம்) நதிக்கரையை அடைந்தார். நதிக்கு அப்பால் போரசின் பெரும்படை அணிவகுத்திருப்பதைக் கண்டார். ஜீலம் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. அதனைக் கடப்பது எளிதாக இருக்கவில்லை. சிறிது நாட்கள் காத்திருந்த பின்னர் அவர் ஜிலம் நதியைக் கடந்து காரிச்சமவெளியில் போரசின் படைகளோடு போரிட்டார். இதுவே புகழ்மிக்க ஹைடாஸ்பஸ் போர் எனப்படுகிறது. மிகவும் கடுமையான போராகவே அது காணப்பட்டது. வலிமையான படைகள் இருந்தபோதிலும் இறுதியில் போரஸ் தோற்றுப் போனார். இந்திய அரசனின் வீரத்தையும் தலைமைப் பண்பையும் கண்டு வியப்பெய்திய அலெக்சாண்டர் போரசை பெருந்தன்மையுடன் நடத்தியதோடு மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிரேக்கப் படையெடுப்புகள் , அலெக்சாண்டர், வரலாறு, இந்திய, அவர், போரஸ், இந்தியா, ஆண்டு, கிரேக்கப், ஹைடாஸ்பஸ், படையெடுப்புகள், ஜீலம், இந்தியாவின், ஆய்வு, கிழக்கு, புவியியல், போரிட்டார், பின்னர், போரசின், நதியைக், கடந்து, போர், கண்டார், தட்சசீலத்து, படையெடுப்பின்போது, அரசியல், அலெக்சாண்டரின், இந்தியாவில், சிறு, படையெடுத்து, படையெடுத்தார், அம்பி, ஆட்சி, இருந்தன, வடமேற்கு, அவரது, எளிதாக