முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 18
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 18
2. தமிழ் இலக்கியம்
பழைய நிலை
தமிழ் இலக்கியம் ஏறக்குறைய இருபத்தைந்து நூற்றாண்டுகளின் வரலாறு உடையது. தொடக்கத்தில் தமிழ்நாட்டில் பிற மொழியாரின் தாக்குறவும் (influence) பிறமொழி இலக்கியத்தின் தாக்குறவும் குறைவாக இருந்த காரணத்தால், அங்கங்கே வழங்கிவந்த நாட்டுப் பாடல்களிலிருந்தே புலவர்களின் பாடல்கள் அமைக்கப்பட்டுத் தோன்றின. தென்னிந்தியாவின் மற்றத் திராவிட மொழிகளின் இலக்கியங்கள் கி. பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றியவை ஆகையால், அதற்கு முந்திய பன்னிரண்டு நூற்றாண்டுக் காலத் தமிழ் இலக்கியம் ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் குழந்தைபோல் தனியே வளர்ந்து வந்தது. மிகப் பழைய பாடல்களின் தொகுப்புகளாக உள்ள சங்க இலக்கியத்தில் (கி. மு. 500 கி. பி. 200) கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளைப் பற்றிய தௌ¤வான குறிப்புகள் இல்லை. வடுகர் என்ற சொல் திருப்பதி மலைக்கு வடக்கே உள்ளவர்களைப்பற்றி வழங்கியது. மேற்குக் கடற்கரைப் பகுதியாகிய கேரளத்தில் வழங்கும் மலையாள மொழியைப்பற்றிய குறிப்பும் இல்லை. கேரளத்துக்கு அப்போது வழங்கிய பெயர் சேர நாடு. அங்கே வாழ்ந்த மக்கள் தமிழ்ப் பாடல்களைக் கற்றுவந்தனர்; புலவர்கள் தமிழப் பாடல்கள் இயற்றி வந்தனர். சங்க காலத்துக்கும் கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் சம்ஸ்கிருதம் கற்ற அறிஞர்களின் உறவு தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. ஆனால் அந்த உறவு சமஸ்கிருதப் புலவர்களுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் நகரங்களின் அளவில் இருந்தவந்த தொடர்பே ஆகும். தெய்வம், காரணம், ஆணை (ஆக்ஞா) முதலான சொற்கள் கலந்த காலம் அது. சைனசமயமும் பௌத்த சமயமும் தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியபிறகு. அந்தச் சமயங்களைச் சார்ந்தவர்களில் பலர் சம்ஸ்கிருதம் பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளைக் கற்றவர்களாக இருந்தபடியால், வடநாட்டு மொழிகளின் சொற்கள் தமிழில் கலக்கத் தொடங்கின. வடமொழி இலக்கியங்களின் தாக்குறவு மெல்ல மெல்ல ஏற்பட்டது. அப்போதுதான் வட சொற்கள் பல தமிழில் கலந்தன. அந்நிலையில், இந்தியாவில் இலக்கிய மொழிகளாக மதிக்கப்பட்டிருந்தவை இரண்டே; ஒன்று, தமிழ்; மற்றொன்று சம்ஸ்கிருதம். ஆகையால் முன்னதைத் தென்மொழி என்றும், சமஸ்கிருதத்தை வடமொழி என்றும் அக்காலத்தார் குறிப்பிட்டனர். திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதற்கு வடமொழியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 18 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - தமிழ், சொற்கள், சம்ஸ்கிருதம், தமிழ்நாட்டில், இலக்கியம்