முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » அர்த்தமுள்ள இந்துமதம் » காமாந்தக உணர்ச்சி
அர்த்தமுள்ள இந்துமதம் - காமாந்தக உணர்ச்சி
ஒரு பாடலில் உயர்ந்த பெண்ணைக் குறிக்கும் போது,
சாமெனில் சாதல் நோதல்
தன்னவன் தணந்த காலை
பூமனும் புனைதல் இன்றிப்
பொற்புடன் புலம்ப வைகிக்
காமாந்தகனை என்றும் சொல்லார்
கணவற்கை தொழுது வாழ்வார்!
தேமலர்த் திருவோ டொப்பார்
சேர்ந்தவன் செல்லல், தீர்ப்பார்!
என்கிறது.
தாழ்ந்த பெண்டிரைக் குறிக்கும்போது,
பெண்ணெனப் படுவ கேண்மோ
பீடில பிறப்பு நோக்கா
உள்நிறை உடைய வல்ல
ஓராயிரம் மனத்த வாகும்,
எண்ணிப்பத் தங்கை யிட்டால்
இந்திரன் மகளும் ஆங்கே
வெண்ணெய்க்குள் றெரியுற் றாற்போல்
மெலிந்துபின் நிற்கு மன்றே!
என்கிறது.
இந்த இருவகைப் பெண்டிரில், முதல் வகையினர் நூற்றுக்குத் தொண்ணூறு பேராவர்.
இரண்டாம் வகையினர் விதிவிலக்கில் சேர்க்கப் படவேண்டியவர்கள்.
ஒரு குல மகளுக்குப் பள்ளியறையும், காமாந்தக உணர்ச்சியும், ஒரு குழந்தைக்குத் தாயாகிற தொழிலுணர்ச்சியே தவிர, சுகம் முதல் காரணமாகாது.
`சுகமும் அதிலே ஒன்று’ என்பதைத் தவிர, அதற்கு ஒரு தனி முக்கியத்துவத்தை அவர்கள் கொடுப்பதில்லை.
காரணம், இந்து மதம் அவர்களை அப்படி வளர்த்திருக்கிறது.
கணவனிடம் அத்தகைய சுகம் கிடைக்கா விட்டாலும் குழந்தைக்குப் பாலூட்டுவதிலேயே அதைப் பெற்றுவிடுகிறாள் ஒரு இந்துப் பெண்.
காமாந்தகத்தின் மின்சாரத் தாக்குதல், நற்குடிப் பிறந்த இந்துப் பெண்களிடம் பலிப்பதில்லை.
ஆனால், ஆடவர்களது நிலை வேறு.
அவர்களது ரத்த அரிப்பு, அந்த எல்லைக்கும் அவர்களைத் துவண்டுகிறது.
லெளகீக மனிதனுக்கு இந்த ராட்சத அரிப்பு ஏற்படும் போது, குலப்பெண்களைக் கெடுக்காமாந்தகல், அவன் அந்த உணர்ச்சியைத் தணித்துக்கொள்வதற்காகவே `தேவதாசி முறை’ ஏற்பட்டது.
முடிந்தவர்களுக்கு ஏக பத்தினி விரதத்தையும், முடியாதவர்களுக்கு இந்த வகை வாழ்க்கையையும், அது அனுமதித்தது.
ஒரே இதிகாசத்தில் ஒரே அரண்மனையில், இந்த இருவகைக் காட்சிகளையும் அது காட்டிற்று.
`தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியர்’ என்றது.
அவன் மகன் ராமன், `ஏகபத்தினி விரதன்’ என்றது.
அது தசரதன் செயலைக் குற்றம் சாட்டவில்லை.
ஆனால், ராமனின் நடத்தையைப் புகழ்ந்துரைத்தது.
பல மாதர் உறவுக்கு அது நியாயம் கற்பிக்கவில்லை.
ஆனால், அனுமதித்தது.
அதே சமயம், ஒருதார வாழ்க்கையை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றிற்று.
அதைத் `தெய்வீகம்’ என்றது.
மனித மனத்தின் சபலங்களை அங்கீகரித்து, அதைத் தட்டிக் கொடுத்து, மெதுமெதுவாக மீட்பதே அதுசெய்யும் பணி.
எந்த உணர்ச்சியையும், அது அறுவைச் சிகிச்சை மூலம் தீர்க்க விரும்பவில்லை.
அங்கீகரித்துத் திருத்தும் நாகரிகத்தைக் கையாண்டது.
“நீ பன்றியைக் கூடச் சாப்பிடலாம்; ஆனால் உடலில் கொழுப்பேறிவிடும், பார்த்துச் சாப்பிடு” என்று சொன்னதே தவிர, கட்டளையிடவில்லை.
எண்ணெய் ஸ்நானம் செய்த அன்று மனைவியோடு உறவு கொண்டால், சிலருக்கு ஜன்னி காணும்.
அந்த உடற்கூற்று உண்மையைக்கூட, அது நாகரிகமாக `தரித்திரம் பிறக்கும்’ என்று சொன்னதே தவிர `ஜன்னி காணும்’ என்று பயமுறுத்தவில்லை.
அது காமாந்தகத்தை ஒருவகைக் குற்றமாகக் கருதவில்லை.
ஆனால், குற்றங்களுக்குக் காரணமான காமாந்தகத்தை அது கதைகளிலே விவரிக்கிறது.
இளம் விதவைகள் வேதம் படிக்கிறார்கள், புராணம் படிக்கிறார்கள், இதிகாசம் படிக்கிறார்கள். உணர்ச்சியடங்கி விடுகிறதே! எப்படி?
அவர்களே நமது வாரப் பத்திரிகைகளையும், மாதப் பத்திரிகைகளையும் தொடர்ந்து படித்தால் என்னவாகும்?
சராசரி மனிதனின் தவிர்க்கமுடியாத உணர்ச்சியாகிய காமாந்தகத்தை, இந்து மதம் எவ்வளவு வைதீகமாகக் கையாளுகிறது.
`காமாந்தகம் எப்போது பாவமாகிறது’ என்பதை அது எவ்வளவு அற்புதமாக விவரிக்கிறது.
இந்து சாஸ்திரங்களில், ஓரிடத்தில் `உடலுக்கு ஏற்ற உறவு எது?’ என்பதுகூடக் கூறப்பட்டிருக்கிறது.
`தன்னைவிடப் பத்து வயதுக்குமேல் அதிகமான ஒரு பெண்ணுடன் ஒருவன் உறவு கொண்டால், அவன் உடம்பு மெலிந்து முகம் களையிழந்து போகிறது.
வயது குறைந்த பெண்ணோடு தொடர்பு கொண்டால் முகம் பிரகாசமடைகிறது.
ஒரு மத சாஸ்திரம் இதை ஏன் விவரிக்க வேண்டும்?
ஒன்று ஒரு ஆரோக்கியமான உடம்புக்குப் பொறுப்பேற்றுக் கொள்வது.
இரண்டு பத்து வயது அதிகமான பெண் குறைந்த வயதுடைய ஆணுடன் தொடர்பு கொள்ள வருகிறாள் என்றால், ஒன்று அவள் கெட்ட நடத்தையுடையவளாக இருக்கவேண்டும்; அல்லது இன்னொருவன் மனைவியாக இருக்கவேண்டும்; அதைத் தடுப்பது.
அப்படியென்றால் குறைந்த வயதுடைய பெண்ணோடு தொடர்பு கொள்வதைச் சிலாகித்துப் பேசுவது கற்பழிப்பதற்கு வகை செய்யாதா?
இல்லை; அதனால்தான் அது பல தார மணத்தை ஏற்றுக் கொண்டது.
நீ எதை விரும்பினாலும், அதற்கொரு அளவை நிர்ணயித்து அதை அனுமதித்துப் பின் உன்னை ஞானியாக்குவதே இந்து மதம்.
காமாந்தக உணர்ச்சியிலும் அதன் கட்டம் அத்தகையது தான்.
எப்போது காமாந்தக உணர்ச்சி பாவமாகிறதோ, அப்போது தண்டனை கடுமையாகிறது.
இந்து மதத்தின் பயமுறுத்தல் என்பது அங்கே மட்டும்தான் வருகிறது.
`யாரையும் கெடுக்காத, யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு ஆடவனின் உணர்ச்சிகளை, இந்து மதம் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது’ என்று நான் சொன்னால் யார் அதை மறுக்கமுடியும்?
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்து, ஆனால், என்று, இந்த, மதம், தவிர, படிக்கிறார்கள், காமாந்தகத்தை, தொடர்பு, கொண்டால், குறைந்த, என்றது, அந்த, அவன், அதைத், உறவு - Arththamulla Indhu Madham - அர்த்தமுள்ள இந்துமதம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்