இயற்பியல் :: அடிப்படைகள் - பக்கம் - 4
31. கணித மாதிரிகள் என்றால் என்ன?
உண்மைப் பட்டறிவு இல்லாமலே இயற்கை நிகழ்ச்சிகளின் நடத்தையை முன்னறிந்து கூற ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் மாதிரிகள். எ-டு. சார்புக் கொள்கை. ஐன்ஸ்டீன்.
32. வழிவரைபடம் என்றால் என்ன?
அம்புக்குறிகளால் இணைக்கப்பட்ட குறிகளைப் பயன்படுத்தும் விளக்கப்படம். சிக்கலுக்குத் தீர்வு காணப் பயன்படுவது.
33. திட்ட மாதிரி என்றால் என்ன?
ஒரு பொருளின் நிலையான வடிவம். எ-டு. கதிரவன் திட்ட மாதிரி.
34. பிரிட்டிஷ் அளவுமுறையை விட மெட்ரிக் அளவுமுறை சிறந்தது ஏன்?
மெட்ரிக் முறை தசம அளவில் உள்ளது. ஒரு மதிப்பை இன்னொரு மதிப்பாக எளிதில் மாற்றலாம். எ-டு: 3.145, 314.5
35. முதல் அறிவியல் கழகத்தைத் தனியாளாக நின்று நிறுவியவர் யார்?
இத்தாலிய இயற்பியலார் ஜியாம்பட்டிஷ்டா டெல்லா போர்ட்டா. நிறுவிய ஆண்டு 1560.
36. முதல் இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றவர் யார்?
ஜெர்மன் அறிவியலார் ராண்ட்ஜன், 1901.
37. கலிலியோ எவ்வாறு தற்பொழுது சிறப்பிக்கப்பட்டுள்ளார்?
இவர் பெயரில் விண்ணகத்தை ஆராய 1991இல் ஒரு விண்வெளிக்கலம் ஏவப்பட்டுள்ளது. இவர் தற்கால இயற்பியலின் தந்தை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடிப்படைகள் - பக்கம் - 4 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால்