இயற்பியல் :: அடிப்படைகள் - பக்கம் - 2
11. அலகின் இரு வகைகள் யாவை?
அடிப்படை அலகுகள், வழியலகுகள்.
12. அடிப்படை அலகுகள் என்றால் என்ன?
பெரும்பான்மை அலகு முறைகளின் அடிப்படையாக அமையும் நீளம், (செ.மீ), நிறை (கிராம்), காலம் (வினாடி) ஆகியவற்றின் அலகுகள்.
13. வழியலகுகள் யாவை?
அடிப்படை அலகுகளை ஒட்டி வரையறை செய்யப் படும் அலகு. எ- டு நியூட்டன் என்பது கிலோ கிராம் மீட்டர் வினாடி என வரையறுக்கப்படும்.
14. துணையலகுகள் என்றால் என்ன?
பருமனற்ற அலகுகள். அடிவழி அலகுகளுடன் வழியலகுகளை உருவாக்கப் பயன்படுபவை. எ-டு. ரேடியன்.
15. அறிவியலார் பெயர் தாங்கிய சில அலகுகள் யாவை? ஆம்பியர், ஒம், ஜூல், நியூட்டன்.
16. அனைத்துலக அலகுகள் என்றால் என்ன?
அறிவியல் ஆய்வுகளுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கும் அனைத்துலக அலகுகள். இதில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன. ஆம்பியர், காண்டலா, கெல்வின், கிலோகிராம், மீட்டர், மோல், வினாடி
17. எம்.கே.எஸ். முறை என்றால் என்ன?
மீட்டர் கிலோகிராம் வினாடி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த அலகு முறை. எஸ்.ஐ. அலகுக்கு அடிப்படையாக அமைந்தது.
18. பரப்பு என்றால் என்ன?
நீளம் X அகலம் = பரப்பு.
19. பருமன்கள் (பரிமாணங்கள்) என்றால் என்ன?
இவை அடிப்படை அலகுகளான நிறை, நீளம், காலம் ஆகியவற்றின் அடுக்குக்குறிகளை எவ்வளவு உயர்த்துகிறோம் என்பதைக் குறிப்பது. எ டு. நீளம் x நீளம்xநீளம். பரும வாய்ப்பாடு நீளம் (v=LXLXL=L)
20. பருமன்களின் பயன்கள் யாவை?
1. ஒரு சமன்பாடு சரியா தவறா என்பதை அறியலாம். 2. ஒர் அலகு முறையில் அமைக்கப்படும் இயற்பியல் அளவினை மற்றோர் அலகு முறையில் மாற்ற இயலும். 3. கணக்கிடப்பட வேண்டிய இயற்பியல் அளவுகளுக் கிடையே உள்ள தொடர்பினைத் தரும் சமன்பாட்டை வருவிக்கலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடிப்படைகள் - பக்கம் - 2 - இயற்பியல், Physics, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அலகுகள், என்றால், என்ன, அடிப்படை, அலகு, நீளம், யாவை, வினாடி, மீட்டர், ஆகியவற்றின்