புவியியல் :: அனைத்துலகத் திட்டங்கள்
21. இத்திட்டத்தின் சிறப்புகள் யாவை?
1. உலக அளவில் பல நாடுகளின் கூட்டு முயற்சியினால் நடைபெற்ற மாபெரும் திட்டம்.
2. அனைத்துலக நில இயற்பியல் ஆண்டுத் திட்டத்தை முன் மாதிரியாகச் கொண்டு செயற்படுத்தப்பட்டது.
3. முதன் முதலாக இந்தியக் கடல் நிறைவாக அறிவியல் அடிப்படையில் ஆராயப்பட்டது.
4. இத்திட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட துறையை, சிக்கலை ஆராய்ந்தது முடிவுகளைக் கூறிற்று. சிறப்பாக, வானிலையை ஆராய்ந்தது.
5. இத்திட்டத்திற்கு ஆன செலவு ரூ 6 கோடி. இதில் பாதியை அமெரிக்கா ஏற்றது. எஞ்சிய பாதியைப் பிற நாடுகள் பகிர்ந்து கொண்டன.
6. திட்டகாலத்தில் 1,88,000 மைல் தொலைவிற்கு 60 கப்பல் பயனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 20 நாடுகளிலிருந்து 40 கப்பல்கள் இப்பயணங்களை மேற்கொண்டன.
22. மோனக்ஸ் என்பது என்ன?
இது பருவக் காற்று ஆராய்ச்சித் திட்டமாகும். (MonexMonsoonExperiment) இது 1963 இல் தொடங்கி 1979 இல் முடிந்தது. இதன் முழுப் பெயர் மோனக்ஸ் - 79.
23. இதன் முன்னோடிகள் யாவை?
1. 1963 - 1965 இல் நடைபெற்ற அனைத்துலகக் கடல் ஆராய்ச்சிப் பயணம்.
2. இந்தியா - சோவியத் வானியல் ஆய்வு 1977.
24. இரு உருவாகக் காரணமாக இருந்தவர் யார்?
இந்திய உற்றுநோக்கு ஆராய்ச்சி நிலையங்களின் பொது இயக்குநர்.
25. இத்திட்டம் எங்கு எப்பொழுது உருப்பெற்றது?
1970 இல் பிரசல்சில் நடைபெற்ற உலகத் திட்ட மாநாட்டில் உருப்பெற்றது.
26. இத்திட்டத்தின் நோக்கம் என்ன?
பருவக் காற்றினைத் தெளிவாகத் தீர ஆய்வது.
27. பருவ மழைக்குரிய காரணங்கள் யாவை?
1. பகலவன் கதிர்வீச்சு
2. புவிக்கதிர்வீச்சு
3.பெருங்கடல்களின் இயக்கம்
4. நிலம் கடல் ஆகியவற்றின் உராய்வு விளைவுகள்
5. மலைகள்.
28. பருவக் காற்றுக்கு எம்மலை இன்றியமையாதது?
இமயமலை.
29. இத்திட்டத்தில் கலந்து கொண்ட நாடுகள் யாவை?
இந்தியா, உருசியா, அமெரிக்கா
30. இத்திட்டத்தின் சிறப்பென்ன?
இதற்காக இந்திய அரசு 25 கோடி ரூபாய் செலவு செய்தது. இந்திய வானிலை ஆராய்ச்சி வரலாற்றில் இது பெரிய ஆய்வு.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனைத்துலகத் திட்டங்கள் - புவியியல், Geography, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, இந்திய, பருவக், நடைபெற்ற, இத்திட்டத்தின், கடல்