வேதியியல் :: அடிப்படைகள்
31. இடப்பெயர்ச்சியின் வகைகள் யாவை?
1. காற்றின் கீழ்முகப் பெயர்ச்சி - காற்று கீழ்சென்று இலேசான வளி மேல் வருதல். எ-டு. அம்மோனியா.
2. காற்றின் மேல்முகப் பெயர்ச்சி - காற்று மேல் சென்று கன வளி கீழ்வருதல். எ-டு. குளோரின்.
3.நீரின் கீழ்முகப் பெயர்ச்சி - வளி மேல் சென்று நீரைக் கீழ்த் தள்ளுதல். எ-டு. அய்டிரஜன்.
32. மெழுகுவத்திச் சுடரிலுள்ள நான்கு மண்டலங்கள் யாவை?
1. கருநிற மண்டலம் இதிலுள்ள வளிகள் எரியுந் தன்மை உள்ளவை.
2.ஒளிமண்டலம் - இங்குள்ள வளிகள் எரிந்து உண்டாகும் நுண்ணிய இம்மிகள் சூடடைந்து இம் மண்டலத்திற்கு ஒளியைத் தருகின்றன.
3. ஒளிர்வற்ற மண்டலம் - இங்கு வளிகள் முற்றிலும் ஆக்சிஜன் ஏற்றம் அடைகின்றன. ஒளிர்வு குறைவு.
4. நீலநிற மண்டலம் - வெப்பம் மிகுதி. இங்கு எரிதல் நிறைவு பெறுகிறது.
33. செந்தழல் நோக்கி என்றால் என்ன?
கதிர்வீச்சு வெப்பத்தின் செறிவை அளக்கப் பயன்படுங் கருவி.
34. செந்தழல் ஆய்வு என்றால் என்ன?
கனிமங்களைத் தீச்சுடர் மூலம் ஆய்ந்து பார்த்தல்.
35. செந்தழல் பகுப்பு என்றால் என்ன?
மீஉயர் வெப்பநிலைகளுக்கு உட்படுத்தி, வேதிப் பொருள்களைச் சிதைத்தல்.
36. செந்தழல்மானி என்றால் என்ன?
கதிர்வீச்சு விதிகளைப் பயன்படுத்தித் தொலைவிலிருந்து மீவெப்ப நிலைகளைப் பதிவு செய்தல்.
37. செந்தழல் அளவை என்றால் என்ன?
செந்தழல்மானியைக் கொண்டு கதிர்வீச்சு உமிழும் உயர் வெப்பநிலைகளை அளப்பது.
38. அணு என்றால் என்ன?
ஒரு வேதிவினையில் கலந்து கொள்ளும் ஒரு தனிமத்தின் மிகச் சிறிய பகுதி.
39. மூலக்கூறு என்றால் என்ன?
ஒரு தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச் சிறியதும் அதன் பண்புகளைப் பெற்றதும் தனித்தியங்குவதுமான நிலைத்த துகள் மூலக்கூறுவாகும். எ-டு. நீர். இதில் அய்டிரஜனும் ஆக்சிஜனும் (2 : 1) உள்ளன.
40. அனுப்பிணைவு என்றால் என்ன?
பருப்பொருள் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள கவரும் ஆற்றல் அவற்றை ஒன்றுபடுத்துகின்றன. பாதரசம் கையில் ஒட்டாததற்கு இதுவே காரணம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அடிப்படைகள் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, செந்தழல், கதிர்வீச்சு, வளிகள், மேல், மண்டலம், பெயர்ச்சி