வேதியியல் :: காடியும் காரமும்
11. காடிமானி என்றால் என்ன?
ஒரு சேமக்கலத்திலுள்ள மின்பகுளியின் ஒப்படர்த்தி காணும் நீர்மானி.
12. காடி எண் என்றால் என்ன?
ஒரு கிராம் பொருளில் தடையில்லாமலுள்ள காடிகளை நடுநிலையாக்கத் தேவைப்படும் பொட்டாசியம் அய்டிராக்சைடின் மில்லிகிராம் எண்ணிக்கை.
13. காடியளவை என்றால் என்ன?
கரைசலிலுள்ள காடியளவை உறுதிசெய்தல்.
14. இது எவ்வாறு உறுதி செய்யப்படுகிறது?
கரைசலின் வலுவை அளப்பதன் வாயிலாக இதனை உறுதி செய்யலாம்.
15. அடர்மிகுகாடி என்றால் என்ன?
நீர் சேராத அமிலம். எ-டு அடர் கந்தக அமிலம்.
16. நீர்த்தகாடி என்றால் என்ன?
நீர் சேர்ந்த காடி நீர்த்த கந்தகக் காடி.
17. அரசநீர்மம் (ராஜ திரவம்) என்றால் என்ன?
அடர்அய்டிரோ குளோரிகக் காடியும் அடர் நைட்டிரிகக் காடியும் 3:1 என்னும் வீதத்தில் சேர்ந்த கலவை.
18. இதன் பயன் யாது?
அதிக அரிப்புத்தன்மை உள்ளதால் பொன், பிளாட்டினம் ஆகிய உலோகக் கலவைகளைக் கரைக்கப்படுவது.
19. நைட்டிரிகக் காடி என்பது யாது?
புகையும் நிறமற்ற நீர்மம், மருந்துகள், சாயங்கள், வெடிமருந்துகள் செய்யப் பயன்படுவது.
20. நைட்ரேட்டாதல் என்றால் என்ன?
நைட்ரசமோனாஸ் என்னும் நச்சியம், அம்மோனியாவை நைட்ரேட்டு உப்பாக மாற்றும் செயல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
காடியும் காரமும் - வேதியியல், Chemistry, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, காடி