தாவரவியல் :: வகைப்பாட்டியல்
11. இதை உருவாக்கியவர் யார்?
ஸ்வீடன் நாட்டுத் தாவரவியலார் கரோலஸ் லின்னேயஸ் என்பவரால் 1735இல் உருவாக்கப்பட்டது.
12. இதன் சிறப்பென்ன?
1. அறிவியல் பெயராதலால் அனைத்துலக அறிவியலா ரும் இதையே பின்பற்றுகின்றனர்.
2. சிறப்பினப் பெயர் இருந்தாலேயே ஒர் உயிரை நாம் இனங்கண்டறிய முடியும்.
13. உயிரியல் வகை என்றால் என்ன?
ஒரே மரபணு இயைபுடைய தனிஉயிர்கள். இயற்கையான தொகுதியாக அமைந்திருத்தல், எ-டு. பால்தொகுதி.
14. கண்ணறை வகைப்பாட்டியல் என்றால் என்ன?
உயிரிகளை வகைப்படுத்துவதில் நிறப்புரிகளின் எண் னிக்கை, அளவு, வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொள்ளுதல்.
15. உயிரியல் வகைப்பாட்டியல் என்றால் என்ன?
சிறப்பினங்களுக்கிடையே உள்ள உறவுகளை ஆராய, ஆய்வு வகைப்பாட்டு நுணுக்கங்களைப் பயன்படுத்தும் துறை. நுணுக்கங்களாவான ஒப்பியல் வகைப்பாட் டியல், சூழ்நிலைச் சான்றுகள், கலப்பின ஆய்வுகள், உயிரணு ஆய்வு முதலியவை.
16. உயிரியல் வேதிவகைப்பாட்டியல் சிறப்பு என்ன?
உயிரிகளை வேதிப்பண்புகள் அடிப்படையில் பாகுபாடு செய்தல், மரப்பால் அடிப்படையில் தாவரக்குடும்பத்தின் இருபெரும் பிரிவுகளாகிய ஆஸ்டிராய்டி, சிக்கோளியாய்டி ஆகிய இரண்டும் பிரிக்கப்பட்டிருத்தல்.
17. எண்சார் வகைப்பாட்டியல் என்றால் என்ன?
உயிர்த்தொகுதியின் பல பண்புகளின் வேறுபாடுகளை எண்ணியல் பகுப்பு செய்து, அதன் அடிப்படையில் வகைப்பாடு மேற்கொள்ளல். இதில் பண்புகள் முதலிடம் பெறுபவை.
18. பெயராளர் என்றால் என்ன?
ஒரு டேக்சானின் முதல் தகுதிப் பெயரைவெளியிடுபவர். வகைப்பாட்டியல் சொல்.
19. திணைத்தாவரங்கள் என்றால் என்ன?
மரவடைகள். குறிப்பிட்ட சூழ்நிலையில் வாழுந் தாவரங்கள். எ-டு. நீர்வாழ்தாவரங்கள், வறண்ட நிலத் தாவரங்கள்.
20. நுண்திணைத் தாவரங்கள் என்பவை யாவை?
பாசி, பூஞ்சை முதலிய தாவரங்கள். இவை குறிப்பிட்ட பகுதியில் வாழ்பவை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வகைப்பாட்டியல் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்ன, என்றால், தாவரங்கள், வகைப்பாட்டியல், உயிரியல், அடிப்படையில்