சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 23
2 என் அறிவீனங்களைக் கண்டித்து, என் அக்கிரமங்கள் அதிகரிக்காதபடிக்கு என் அறிவுக்கு அச்சுறுத்துகிறவன் யார்? என் மன நினைவுகளுக்கும் வரம்பு கட்டுகிறவன் யார்?
3 என் அறிவீனங்கள் அதிகரிக்காதபடிக்கும், என் குற்றங்கள் பெருகாதபடிக்கும், என் பாவங்கள் மிகுதியாகாதபடிக்கும், என் எதிரிகள் முன்பாக நான் விழாதபடிக்கும், என் பகைவர் என்னைப்பற்றி மகிழாதபடிக்கும் எனக்கு உதவுகிறவன் யார்?
4 தந்தையாகிய கடவுளே, என் வாழ்வின் ஆண்டவரே, அவர்கள் விருப்பத்துக்கு என்னைக் கையளியாதேயும்.
5 என் கண்களின் பெருமிதத்தை எனக்குக் கொடாதேயும்@ எல்லா ஆசைகளையும் என்னிடமிருந்து அகற்றும்.
6 உண்டிப் பிரியத்தையும் என்னிடமிருந்து நீக்கிவிடும். ஆசையுணர்வின் செயல்கள் என்னை அணுகாதிருக்கட்டும். நாணமற்றதும் அவிவேகமுள்ளதுமான ஆன்மாவின் அக்கிரமங்களுக்கு என்னைக் கையளியாதேயும்.
7 மக்களே, வாயடக்கம் பற்றிய போதகத்திற்குச் செவிகொடுங்கள். அதை காப்பவன் உதடுகளால் அழியமாட்டான். அக்கிரமச் செயல்களில் விழமாட்டான்.
8 பாவி தன் வீண் பெருமிதத்தினால் கண்டுகொள்ளப்படுவான். அகந்தையுள்ளவனும் அவதூறு பேசுகிறவனும் அவைகளால் குற்றத்திற்கு ஆளாவார்கள்.
9 உன் வாய் ஆணையிடுவதற்குப் பழகாதிருக்கக்கடவது@ ஏனென்றால், அதனால் குற்றங்கள் பல நேரிடும்.
10 கடவுளுடைய பெயர் இடைவிடாமல் உன் வாயில் இராதிருக்கக் கடவது. புனிதருடைய பெயர்களையும் வீணில் சொல்லாதே@ ஏனென்றால், குற்றத்திற்கு ஆளாவாய்.
11 இடைவிடாமல் வதைக்கப்படும் அடிமையிடத்தில் அவன் பட்ட வாதைகளின் அடையாளம் எப்பொழுதும் காணப்படுமாப்போல், ஆணையிடுபவனும் கடவுளை நிந்திப்பவனும் முழுதும் சுத்தமாக மாட்டார்கள்.
12 அதிகமாய் ஆணையிடும் மனிதன் அக்கிரமத்தால் நிரப்பப்படுவான். அவன் இல்லத்தினின்று பொல்லாப்பு அகன்று போகாது.
13 ஒருவன் ஆணையின்படி நடவாதிருப்பின், அவன் குற்றம் அவன் மீது இருக்கும். அவன் யாதொன்றும் அறியாதவன் போல நடப்பானேயாகில், இருவிதமாய்க் குற்றவாளியாகிறான்.
14 பொய் ஆணையிடுவானாயின், அவன் மன்னிக்கப்படமாட்டான்@ அவன் குடும்பமும் தண்டனையால் நிரப்பப்படும்.
15 மரண தண்டனைக்கு உகந்ததான வேறொரு வார்த்தையும் உண்டு. யாக்கோபு சந்ததியில் அது காணப்படாதிருக்கக்கடவது.
16 ஏனென்றால், புண்ணியவான்களிடம் இவையெல்லாம் ஒருபோதும் காணப்படா. அவர்கள் இந்தப் பாவங்களில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள்.
17 நெறிகெட்ட பேச்சில் உன் வாய் பழகாதிருக்கக்கடவது@ ஏனென்றால், அதில் பாவமான வார்த்தை உண்டு.
18 பெரியோருடைய சபையில் நீ இருந்தாலும், உன் தாய் தந்தையரை நினைத்துக் கொள்.
19 ஏனென்றால், சிலவேளை அவர்கள் பார்க்க, கடவுள் உன்னை மறந்துபோவார்@ நீயும் உனக்கு உண்டான பெரியோர் கூட்டுறவால் மதியீனமடைந்து நிந்திக்கப்படுவாய். அப்போது நீ: நான் பிறவாதிருந்தால் நலம் என்பாய்@ உன் பிறந்த நாளையும் சபிப்பாய்.
20 அகந்தை மொழிகளைச் சொல்லப் பழக்கப்பட்ட மனிதன் ஒரு போதும் திருந்துவதில்லை.
21 இருவித மனிதர் பாவங்களில் மிகுந்திருக்கிறார்கள்@ மூன்றாவது விதத்தார் கோபமும் அழிவும் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.
22 நெருப்பைப் போன்ற பேராசையால் எரிகிற ஆன்மா நிறைவு அடையாது.
23 உடலின் தீய ஆசையுணர்வுகளுக்குத் தன்னை அளிக்கும் நெறிகெட்டவன், இவைகளின் வேகம் தணியும் வரைக்கும் தீநெறியை விடான்.
24 விபசாரனுக்கு அப்பமெல்லாம் இனிப்பானதுதான். அவன் சாகிற வரைக்கும் பாவ வழியில் நடந்தாலும் களைத்துப்போவதில்லை.
25 தன் மனைவியை மீறி விபசாரம் செய்கிறவன் தன் ஆன்மாவையே புறக்கணித்து: என்னைப் பார்க்கிறவன் யார் என்கிறான்.
26 அவன்: இருள் என்னைச் சூழ்ந்திருக்கிறது@ சுவர்கள் என்னை மூடியிருக்கின்றன@ ஒருவரும் என்னைப் பார்க்கிறதில்லை@ யாருக்கு நான் அஞ்சுவேன்? உன்னத கடவுள் என் பாவங்களை நினைக்க மாட்டார் என்பான்.
27 ஆனால், அவருடைய கண் அனைத்தையும் பார்க்கிறதென்று அவன் சிந்திப்பதில்லை. மனிதனுக்கு மட்டும் அஞ்சுவதும், மனிதனுடைய பார்வைக்கு அஞ்சி நடப்பதும் தெய்வ பயத்தைத் தன்னிடத்தினின்று ஓட்டி விடுவதாம் என்று அவன் அறியான்.
28 ஆண்டவருடைய கண்கள் கதிரவனைக் காட்டிலும் மிக்க ஒளியோடு இருக்கின்றனவென்றும், மனிதருடைய எல்லா வழிகளையும், பாதாளத்தின் ஆழத்தையும் பார்க்கின்றனவென்றும், மனிதருடைய இதயங்களையும் இரகசியங்களையும் ஆராய்ந்து அறிகின்றனவென்றும் அவன் கண்டுபிடிப்பதில்லை.
29 ஏனென்றால், அனைத்தும் படைக்கப்படுவதற்கு முன்பே ஆண்டவரான கடவுள் அவைகளை அறிந்திருக்கிறார். அது போலவே, படைத்த பிறகும் அனைத்தையும் பார்க்கிறார்.
30 ஆதலால், விபசாரன் நகரத்தின் தெருக்களில் தண்டிக்கப்படுவான்@ குதிரைக் குட்டியைப் போலத் துரத்தப்படுவான்@ நினையாத நேரத்தில் பிடிபடுவான்.
31 தெய்வ பயம் எத்தகையதென்று அவன் கண்டுபிடியாததால் அனைவராலும் நிந்திக்கப்படுவான்.
32 இவ்வாறே தன் கணவனை விட்டு, விபசாரத்தினால் உரிமை ஏற்படுத்திக்கொள்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் நேரும்@
33 ஏனென்றால், முதன் முதலாக, உன்னத கடவுளுடைய கட்டளைக்கு அவள் கீழ்ப்படிகிறதில்லை@ இரண்டாவது, தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்@ மூன்றாவது, விபசாரம் என்னும் குற்றத்தைக் கட்டிக்கொள்கிறாள்@ வேறு ஆடவனால் தனக்குப் பிள்ளைகள் உண்டாகும்படி செய்து கொள்கிறாள்.
34 அவள் சபைக்குக் கூட்டிக்கொண்டு வரப்படுவாள்@ அவள் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கப்படுவாள்.
35 அவள் மக்கள் வேரூன்ற மாட்டார்கள்@ அவள் கிளைகளும் கனிகொடா.
36 அவள் ஞாபகம் எல்லாருக்கும் வெறுப்பைத் தரும்@ அவளுடைய அவமானம் ஒரு போதும் அற்றுப் போகாது.
37 அவளுக்குப் பிற்காலத்தில் இருக்கிறவர்கள் தெய்வ பயத்தை விட உத்தமமானது ஒன்றுமில்லை என்று அறிவார்கள்@ ஆண்டவருடைய கட்டளைகளைக் கவனிப்பதை விட இனிதானது ஒன்றுமில்லை என்றும் கண்டுகொள்வார்கள்.
38 ஆண்டவரைப் பின்பற்றுவது பெரும் மாட்சி@ ஏனென்றால், நீடிய ஆயுளை அவரிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 50 | 51 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீராக் ஆகமம் - பழைய ஏற்பாடு, அவன், ஏனென்றால், அவள், ஏற்பாடு, என்னைக், யார், பழைய, ஆகமம், சீராக், நான், கடவுள், தெய்வ, பாவங்களில், போதும், மனிதன், போகாது, உண்டு, வரைக்கும், ஒன்றுமில்லை, அனைத்தையும், ஆண்டவருடைய, உன்னத, என்னைப், மனிதருடைய, விபசாரம், மாட்டார்கள், மூன்றாவது, பழகாதிருக்கக்கடவது@, வாழ்வின், ஆண்டவரே, அதில், கடவுளே, தந்தையாகிய, திருவிவிலியம், ஆன்மிகம், சிக்கிக், குற்றங்கள், குற்றத்திற்கு, வாய், கடவுளுடைய, என்னை, என்னிடமிருந்து, கையளியாதேயும், எல்லா, இடைவிடாமல்