1 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 15
2 பிறகு தாவீது, "கடவுளின் திருப்பேழையைச் சுமக்கவும், என்றென்றும் தமக்குத் திருப்பணி புரியவும் ஆண்டவர் தேர்ந்து கொண்ட லேவியரைத் தவிர வேறொருவரும் அப்பேழையைச் சுமந்து வரலாகாது" என்றுரைத்தார்.
3 கடவுளின் திருப்பேழைக்காகத் தாம் தயாரித்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டு வரும்படி தாவீது இஸ்ராயேல் மக்கள் அனைவரையும் யெருசலேமில் ஒன்று திரட்டினார்.
4 பின் ஆரோனின் புதல்வரையும்,
5 லேவியராகிய காத்தின் புதல்வரில் தலைவனாகிய ஊரியேலையும், அவன் சகோதரரான நூற்றிருபது பேரையும்,
6 மெராரியின் புதல்வரில் தலைவனான அசாயியாவையும் அவன் சகோதரரான இருநூற்றிருபது பேரையும்,
7 கெர்சோம் புதல்வரில் தலைவனான யோவேலையும், அவன் சகோதரரான நூற்று முப்பது பேரையும்,
8 எலிசபான் புதல்வரில் செமாயியா என்ற தலைவனையும் அவன் சகோதரரான இருநூறு பேரையும்,
9 எபுரோன் புதல்வரில் எலியேல் என்ற தலைவனையும் அவன் சகோதரரான எண்பது பேரையும்,
10 ஒசியேல் புதல்வரில் அமினதாப் என்ற தலைவனையும் அவன் சகோதரரான நூற்றுப் பன்னிரண்டு பேரையும் வரச் செய்தார்.
11 பின் தாவீது குருக்களாகிய சாதோக்கையும் அபியதாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயியா, யோவேல், செமெயியா, எலியேல், அமினதாப் ஆகியோரையும் வரவழைத்தார்.
12 அவர்களை நோக்கி, ~லேவியர் குலத் தலைவர்களே உங்களையும் உங்கள் சகோதரர்களையும் தூய்மைப் படுத்திக் கொண்டு, இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரின் திருப்பேழையை அதற்காகத் தயாரிக்கப் பட்டுள்ள இடத்திற்குக் கொண்டு வாருங்கள்.
13 ஏனெனில், முன்னர் நீங்கள் அதைத் தூக்காததால் நம் கடவுளாகிய ஆண்டவர் நமக்கு அழிவைக் கொணர்ந்தார். ஏனெனில் குறித்தவாறு முறையான வழியில் அதை நாம் தேடாது போனோம்" என்றார்.
14 அவ்வாறே குருக்களும் லேவியரும் இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவரின் திருப் பேழையைச் சுமந்து வரவேண்டித் தங்களைத் தூய்மைப் படுத்திக் கொண்டனர்.
15 பின் லேவியர்கள் ஆண்டவரின் சொற்படி மோயீசன் கற்பித்தது போலக் கடவுளின் திருப் பேழையை அதன் தண்டுகளினால் தூக்கி, தங்கள் தோள்களின் மேல் வைத்துச் சுமந்து வந்தனர்.
16 தாவீது லேவியர் குலத் தலைவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் சகோதரர்களுக்குள் பாடகரை நியமித்துக் கொள்ளுங்கள். தம்புரு, சுரமண்டலம், கைத்தாளம் முதலிய இசைக் கருவிகள் முழங்க, மங்கள இசை ஒலிக்க, அவர்கள் தங்கள் குரலை உயர்த்திப் பாடவேண்டும்" என்றார்.
17 அவ்வாறே அவர்கள் யோவேலின் மகன் ஏமானையும், அவன் சகோதரரான பரக்கியாசின் மகன் ஆசாபையும், அவர் தம் சகோதரரான மெராரியின் புதல்வரில் கசாயியாவின் மகன் ஏத்தான் என்பவனையும்,
18 அவர்களோடு அவர்களின் சகோரர்களையும் அமர்த்தினார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக, வாயிற்காவலரான சக்கரியாஸ், பேன், யாசியேல், செமிரமொத், யாகியேல், ஆனி, எலியாப், பனாயியாஸ், மாசியாஸ், ஒபேதெதோம், ஏகியேல் ஆகியோரை நிறுத்தினார்கள்.
19 பாடகரான ஏமான், ஆசாப், ஏத்தான் ஆகியோர் வெண்கலக் கைத் தாளங்களை ஒலிப்பதற்காக நியமிக்கப்பட்டனர்.
20 சக்கரியாஸ், ஓசியேல், செமிரமரெத், யாகியேல், ஆனி, எலியாப், மாசியாஸ், பனாயியாஸ் என்பவர்களோ யாழ்களை மீட்டி வந்தனர்.
21 மத்தாத்தியாஸ், எலீப்பலு, மசேனியாஸ், ஒபேதெதோம், ஏகியேல், ஒசாசியு ஆகியோர் எண்ணரம்புள்ள வீணைகள் ஒலிக்க வெற்றிப் பாடலைப் பாடி வந்தனர்.
22 லேவியருக்குத் தலைவனான கொனேனியாசு பாடல்களைத் தொடங்கும் பாடகர்த் தலைவனாய் இருந்தான். ஏனெனில் அவன் மிகவும் திறமையுள்ளவன்.
23 பாக்கியாசும், எல்கானாவும் திருப்பேழையைக் காவல் புரிந்து வந்தனர்.
24 ஆனால் செபேனியாசு, யோசப்பாத், நாத்தானியேல், அமசாயி, சக்கரியாஸ், பனாயியாஸ், எலியெசார் ஆகிய குருக்கள் கடவுளின் திருப்பேழைக்கு முன் எக்காளம் ஊதிக்கொண்டு வந்தார்கள். ஒபேதெதோமும் ஏகியாசும் பேழையின் வாயிற்காவலராய் இருந்தனர்.
25 இவ்வாறாக, தாவீதும் இஸ்ராயேலில் பெரியவர் யாவரும், ஆயிரவர் தலைவர்களும் அதிபதிகளும், ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை ஒபேதெதோமின் வீட்டிலிருந்து எடுத்துவர மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றனர்.
26 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமந்து வந்த லேவியருக்குக் கடவுள் உதவியதால், ஏழு காளைகளும், ஏழு செம்மறிக் கடாக்களும் பலியிடப்பட்டன.
27 தாவீதும் திருப் பேழையைச் சுமந்து வந்த எல்லா லேவியரும் பாடகரும் பாடல்களைத் தொடங்கும் பாடகர்த் தலைவனான கொனேனியாசும் மெல்லிய சணலாடை அணிந்திருந்தனர்.
28 இஸ்ராயேல் மக்கள் அனைவரும் அக்களிப்போடும் தாரைத் தொனியோடும் எக்காளங்களையும் கைத்தாளங்களையும் சுரமண்டலங்களையும் வீணைகளையும் ஒலித்துக் கொண்டு ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை எடுத்து வந்தனர்.
29 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை தாவீதின் நகரை அடைந்த போது, சவுலின் மகள் மிக்கோல் பலகணி வழியாய் உற்றுப் பார்த்தாள். அங்கே தாவீது அரசர் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருவதைக் கண்டு அவரைப் பற்றித் தன்னுள் இழிவான எண்ணம் கொண்டாள்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 28 | 29 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு, சகோதரரான, அவன், ஆண்டவரின், புதல்வரில், பேரையும், கடவுளின், சுமந்து, தாவீது, வந்தனர், ஏற்பாடு, பழைய, தலைவனான, கொண்டு, உடன்படிக்கைப், ஏனெனில், திருப், நாள், தலைவனையும், பேழையைச், பேழையை, சக்கரியாஸ், மகன், பனாயியாஸ், ஆகமம், பின், தங்கள், பாடல்களைத், தொடங்கும், தாவீதும், வந்த, ஒலிக்க, பாடகர்த், ஆகியோர், மாசியாஸ், எலியாப், யாகியேல், ஒபேதெதோம், ஏகியேல், ஏத்தான், லேவியரும், உங்கள், ", ஆண்டவர், இஸ்ராயேல், மக்கள், திருப்பேழைக்கு, தாவீதின், திருவிவிலியம், ஆன்மிகம், அவர், தமக்குத், லேவியராகிய, மெராரியின், இஸ்ராயேலின், கடவுளான, நீங்கள், என்றார், படுத்திக், தூய்மைப், எலியேல், அமினதாப், நோக்கி, குலத், அவ்வாறே

