பைனாப்பிள் ஸாலட்
தேவையானவை: மெல்லியதாக, நீளமாக நறுக்கிய அன்னாசி துண்டுகள் - ஒரு கப், அதேபோல நறுக்கிய வெள்ளரி துண்டுகள் - ஒரு கப், வினிகர் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப.
செய்முறை: மேலே குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு குலுக்கி, உடனே பரிமாறுங்கள். மிக சுலபமாக செய்யக்கூடிய இந்த ஸாலடை, பரிமாறும்போதுதான் கலக்கவேண்டும். இல்லையென்றால் நீர்த்துப்போய், சுவை குறைந்துவிடும்.ஸாலட் பிரியர்களான மலேசியர்கள், சாதாரணமாக வீடுகளிலும் விசேஷங்களிலும் செய்யும் ஃபேவரிட் அயிட்டம் இது. அன்னாசித் துண்டுகளையும் வெள்ளரித்துண்டுகளையும் நறுக்கி தயாராக வைத்துகொண்டு, அவ்வப்போது கலந்து சாப்பிடுவது அவர்களின் வழக்கம். முக்கியமாக, ‘நஸி மின்யா(க்)’ உடன், சைட்-டிஷ்ஷாக வைத்து ருசிக்கின்றனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பைனாப்பிள் ஸாலட், மலேசியன் உணவுகள், Malaysian Recipes, , Recipies, சமையல் செய்முறை