முட்டாள் சிரிப்புகள் - துன்பப்பட்ட நோயாளி
இரண்டு மாதம் கழித்து டாக்டரிடம் வந்தார் அந்த நோயாளி.
"இப்பொழுது எப்படி இருக்கிறது?" என்று கேட்டார் டாக்டர்".
"நன்றாகத் தேறி விட்டேன் டாக்டர். ஆனால் நீங்க சொன்னதுல ஒன்றைச் செய்யறதுதான் எனக்கு ரொம்பத் துன்பமா இருக்குது" என்றார் நோயாளி.
"என்ன அது?"
"நாள்தோறும் ஒரு கிளாஸ் மது குடிக்கச் சொன்னீர்களே. என்னால் முடியலே. குமட்டிக்கிட்டு வருது. எப்படியோ துன்பப்பட்டுக் குடிக்கிறேன்".
தேடல் தொடர்பான தகவல்கள்:
துன்பப்பட்ட நோயாளி - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "