புகழ்பெற்ற சிரிப்புகள் - அளப்பதில் போட்டி

அண்டப் புளுகனும் ஆகாசப் புளுகனும் பேசிக் கொண்டிருந்தனர்.
என்னிடம் ஒரு கிழக் குதிரை இருந்தது. ஒரு முறை நான் வெளியூர் செல்லப் புறப்பட்டேன். குறிப்பிட்ட ரயில் வண்டியைத் தவறவிட்டு விட்டேன். எனக்கோ அவசரம். பண்ணைக்கு விரைந்து வந்த நான் என் குதிரையில் ஏறி அமர்ந்தேன். இதற்கே அரை மணி நேரம் ஆகி விட்டது. நூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயிலை அடுத்த அரை மணி நேரத்தில் பிடித்து விட்டேன். அவ்வளவு வேகம் என் குதிரை, என்று அளந்தான் அண்டப் புளுகன்.
உன் குதிரை என்ன வேகம்? நான் ஒரு சமயம் பண்ணையில் இருந்தேன். திடீரென்று மழை பிடித்துக் கொண்டது. புயல் காற்று பயங்கர வேகத்தில் வீசத் தொடங்கியது. வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று நினைத்த நான் குதிரையில் ஏறி அமர்ந்தேன்.
புயல் மழையை விட வேகமாகப் பறந்தது குதிரை. என் மீது ஒரு துளி மழை கூடப் பெய்யவில்லை. ஆனால் பத்தடி தூரத்தில் என்னைத் தொடர்ந்து வந்த நாய் மழை வெள்ளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டே வந்தது, என்று அளந்தான் ஆகாசப் புளுகன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அளப்பதில் போட்டி - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, நான், குதிரை