புகழ்பெற்ற சிரிப்புகள் - தளத்தில் உள்ள கறை

குடி வருவதற்காக அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தார். வீடு அவருக்குப் பிடித்திருந்தது. தளத்தை அண்ணாந்து பார்த்தார். பல இடங்களில் சிறு சிறு பழுப்புக் கறை தெரிந்தது.
வீட்டுக்காரரைப் பார்த்து, "அது என்ன கறை"? என்று கேட்டார்.
"இதற்கு முன் இந்த வீட்டில் ஒரு விஞ்ஞானி குடி இருந்தார்" என்றார் வீட்டுக்காரர்.
"அந்த விஞ்ஞானி செய்த பரிசோதனைகளின் நினைவாகப் பல்வேறு ரசாயனப் பொருட்கள் தளத்தில் பட்டுள்ளன.
அப்படித்தானே" என்று கேட்டார் அவர்.
"இல்லை, அந்தக் கறைகள் எல்லாம் விஞ்ஞானி உடையதுதான்" என்றார் வீட்டுக்காரர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தளத்தில் உள்ள கறை - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, ", விஞ்ஞானி