புகழ்பெற்ற சிரிப்புகள் - எத்தனை நாளைக்கு ஒருமுறை
பெரும் பணக்காரியான ஒருத்தி நாகரிகமாக இருந்தாள். ஆனால் அவளிடம் வேலை பார்த்த காரோட்டியோ நன்றாக உடை அணிவதிலோ ஒழுங்காக முக சவரம் செய்து கொள்வதிலோ அக்கறை காட்டாமல் இருந்தான். ஆனால் காரோட்டுவதில் திறமைசாலியாக இருந்தான்.
காரோட்டியின் குறைகளைச் சுட்டிக் காட்டி அவனைத் திருத்த வேண்டுமென்று நினைத்தாள் அவள்.
கார் ஓடிக் கொண்டிருந்தது.
காரோட்டியைப் பார்த்து, "நான் சொல்வதைத் தப்பாக எடுத்துக் கொள்ளாதே. எத்தனை நாளைக்கு ஒரு முறை ஷேவ் செய்வது நல்லது என்று நினைக்கிறாய்?" என்று கேட்டாள் அவள்.
திரும்பி அவளைப் பார்த்த காரோட்டி, "உங்களைப் போன்று மெதுவாக முடி வளர்ப்பவர்களுக்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை ஷேவ் செய்தால் போதும்" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எத்தனை நாளைக்கு ஒருமுறை - Famous Jokes - புகழ்பெற்ற சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "