அசைவ சிரிப்புகள் - தாராள மனசு!
மூன்று பழைய நண்பர்கள் ஒரு பாரில் சந்தித்தார்கள். முதல் ஆளைப் பார்த்து இருவரும் கேட்டார்கள் ''உன் மகன் எப்படியிருக்கான்?'' முதல் ஆள் சொன்னான், ''அவனுக்கென்ன ராஜா மாதிரி இருக்கான். ஆனா அவனுக்கு ரொம்ப தாராள மனசு. போன வாரம்தான் ஒரு பென்ஸ் கார் வாங்கினான். ஆனா போன வாரம் யாருக்கோ இலவசமாக் கொடுத்திட்டான்.'' இரண்டாவது ஆள் தன் மகனைப் பற்றிக் கூற ஆரம்பித்தான், ''என் மகன் ரியல் எஸ்டேட்டில் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்கிறான். அவனுக்கு தாராள மனசு. போன மாசம் ஒரு பங்களா வாங்கியிருந்தான். அதை இப்ப யாருக்கோ இலவசமா கொடுத்திட்டான்.'' மூன்றாவது ஆளின் மகனைப் பற்றி இருவரும் கேட்டார்கள். ''என் மகன் இப்படியெல்லாம் தாராள மனசுக்காரன் இல்லை. ஆனா நிறைய சம்பாதிக்கிறான் இப்போ. போன வாரம் ஒரு பென்ஸ் கார் வாங்கியிருக்கான். இந்த வாரம் பங்களா வாங்கியிருக்கான். அவன்கிட்ட ஒரே ஒரு பிரச்னை, அவன் ஒரு ஹோமோசெக்சுவல்.''
தேடல் தொடர்பான தகவல்கள்:
தாராள மனசு! - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -