முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 27
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 27
3. சங்க இலக்கியம்
(கி. மு. 500 கி. பி. 200)
(கி. மு. 500 கி. பி. 200)
மிகப் பழைய இலக்கியம்
எத்தனையோ அரசுகள் மாறினும் பல நூற்றாண்டுகளாகப் புகழோடு விளங்கிவரும் நகரங்களுள் மதுரை ஒன்று. உலகத்தில் உள்ள மிகப் பழைய நகரங்களுள் அது ஒன்று. அதைப்பற்றிப் பாடிய பழங்காலத்துப் புலவர் ஒருவர், “வெள்ளத்தின் நீர் முற்றுகையிட்டு மதிலைத் தாக்கும் பகை அல்லாமல் போர் முற்றுகை ஒன்றும் அறியாத கோட்டை உடைய ஊர்” என்று பாடியிருக்கிறார். பாட்டுக்கு உரிய கற்பனையழகு இதில் கலந்திருந்த போதிலும், பல மாறுதல்களுக்கு இடையே தொன்றுதொட்டுத் தொடர்ந்துவரும் அமைதியான வாழ்வு உடையது என்ற உண்மைக் கருத்தும் பொதிந்துள்ளது. மதுரை நகரத்தைப்பற்றிக் கூறப்பட்ட இந்தச் சிறப்பு ஏறக்குறைய தமிழகத்தின் தொன்மையான நாகரிக வாழ்வுக்கும் பொருந்துவது என்று சொல்லலாம். இதை உணர்ந்தால், தமிழ்மொழி பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து அமைதியாக வளர்ந்துவரும் வளர்ச்சியைப்பற்றித் தௌ¤வு பெறலாம்.
அவ்வாறு பழங்காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கிவந்த தமிழ்மொழியில் தோன்றி வளர்ந்த இலக்கியங்களில் ஒரு பகுதி இன்று வரையில் காக்கப்பட்டு வருகிறது. அந்தப் பழைய தமிழ் இலக்கியம் சங்க இலக்கியம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. தொல்காப்பியனார் என்ற பழம்புலவர் ஒருவர் அன்றைய மொழியையும் நூல்களையும் ஆராய்ந்து தொல்காப்பியம் என்ற இலக்கண நூலை இயற்றியுள்ளார். சங்க இலக்கியம் தொல்காப்பியம் என்ற இரண்டுமே பழைய தமிழ்மொழி, தமிழ் இலக்கியம்பற்றி நாம் அறிய உதவுவனவாகும். இந்தியாவில் பேச்சுவழக்கில் உள்ள மொழிகளின் இலக்கியங்களுள் மிகப் பழமையானவை இவைகளே ஆகும்.
சங்க இலக்கியம் என்ற தொகுப்பில் உள்ள பாட்டுகளின் காலம் கி. மு. 500முதல் கி. பி. 100 வரையில் என்று கூறுவர். தொல்காப்பியமும் ஏறக்குறைய அந்தக் காலத்தைச் சார்ந்தது எனலாம். ஆனால், தமிழ்மொழியும் தமிழிலக்கியமும் அவற்றிற்கும் முன்னமே வளர்ந்திருந்தவை என்பதில் ஐயம் இல்லை. ஒரு நாட்டில் எத்தனையோ நூற்றாண்டுகளாக வாய்மொழி இலக்கியம் (Folk Literature) மக்களிடையே வழங்கிய பிறகே, புலவர் சிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 27 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - இலக்கியம், பழைய, சங்க, உள்ள, மிகப்