முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 129
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 129

கடலக் கண்டம் ககளக் கூப்புகின்றாளாம்; என் தலவர் படுத்க் கிடக்கும் கடல் இ என்கிறாளாம். தீயத் தழுவி என் அச்சுதன் என்கிறாளாம்; உடல் "வகவில்லயாம். காற்றத் தழுவி என்னுடய "காவிந்தன் என்கிறாளாம். மலயக் கண்டால் திருமா"ல வா என்று கூறுகின்றாளாம். மழ பெய்யத் தொடங்கினால், நாராயணர் வந்தார் என்று மகிழ்ந் ஆடுகிறாளாம். அழகான பசுவின் கன்றக் கண்டால், அதத் தழுவி என் "காவிந்தன் "மய்த்தவ இவ என்கிறாளாம். பாம்பு ஓடினால் அதன்பின் ஓடி என் நாயகரின் படுக்க இ என்கிறாளாம். கூத்தர் யாராவ குடமுழவு ஆடுவதக் "கட்டால், என் "காவிந்தனின் ஆடலாக இருக்கும் என்று ஓடுகிறாளாம். குழலின் ஒலி எங்காவ "கட்டால், என் நாயகர் இசக்கும் ஓச என்று அப்படி"ய மயங்குகிறாளாம். இடச்சியர் விற்பதற்குக் கொண்டுவரும் வெண்ணெயக் கண்டால், அவர் உண்ட வெண்ணெய் இ என்கிறாளாம். ளசி மலரக் கண்டால், நாராயணன் மால இ என்கிறாளாம். கருநிறமான பெரிய "மகங்களக் கண்டால், கண்ணன் என்று சொல்லி "ம"ல ஏறுவதற்காகப் பறக்க முயல்கிறாளாம். பசுமந்த செல்லக் கண்டால், அதன் நடு"வ என் நாயகர் இருப்பார் என்று பின் செல்லுகிறாளாம். ""சார்ந்திருப்பாள். சுற்றிலும் "நாக்குவாள். நெடுந்தொலவு நீண்ட பார்வ பார்ப்பாள். வியர்வ கொள்வாள். கண்ணீர் தளும்பப் பெருமூச்சு விடுவாள். உடல் "சார்வாள். மறுபடி"ம், மறுபடி"ம் கண்ணா என்று சொல்வாள். பெருமா"ன வா என்று கூவுவாள். இப்படி மயங்கிய பெருங்காதல் கொண்ட என் "பதப் பெண்ணுக்காக நான் என்ன செய்"வன்?" என்று தாய் வருந்கிறாள். நம்மாழ்வாரின் காலத்தில் கல்வி நிரம்பிய புலவர்கள் வறுமயால் வாடிச் செல்வர்கள நாடிச் சென்றனர்; அவர்களின் புகழப்பாடி, அவர்கள் தந்த சிறுபொருளப் பெற்று மகிழ்ந்தனர். தங்கள் அருமயான கவிதத் திறமய இப்படிச் செல்வரின் பொருளுக்காக விற்றுவந்த நம்மாழ்வாரின் உள்ளத்திற்கு வெறுப்பத் தந்த. நாட்டில் பலரும் அந்த வழக்கம் உடயவர்களாக இருந்தார்கள். அத வெறுத்ச் சொன்னா"லா செல்வர்களுக்கு வி"ராதமாக இருந்த. ஆனாலும் சொல்வ"த கடம என்று உணர்ந்ம், நம்மாழ்வார் அந்தப் புலவர்களுக்கு அறிவுர கூறினார்; "என் நாவிலிருந் பிறக்கும் இனிய கவிதய யான் அவ்வாறு "வறு ஒருவர்க்காக - அவருடய புகழப் பாடுவதற்காக - கொடுக்க மாட்"டன். திரு"வங்கட மலயில் உள்ள என் அப்பன் எம்பெருமான் இருக்கும்"பா, அவன் புகழப் பாடாமல் "வறு ஒருவர்க்கு என் கவிதத் திறமயப் பயன்படுத்தமாட்"டன்" என்றார். கடலைக் கண்டதும் கைகளைக் கூப்புகின்றாளாம்; என் தலைவர் படுத்துக் கிடக்கும் கடல் இது என்கிறாளாம். தீயைத் தழுவி என் அச்சுதன் என்கிறாளாம்; உடல் வேகவில்லையாம். காற்றைத் தழுவி என்னுடைய கோவிந்தன் என்கிறாளாம். மலையைக் கண்டால் திருமாலே வா என்று கூறுகின்றாளாம். மழை பெய்யத் தொடங்கினால், நாராயணர் வந்தார் என்று மகிழ்ந்து ஆடுகிறாளாம். அழகான பசுவின் கன்றைக் கண்டால், அதைத் தழுவி என் கோவிந்தன் மேய்த்தவை இவை என்கிறாளாம். பாம்பு ஓடினால் அதன்பின் ஓடி என் நாயகரின் படுக்கை இது என்கிறாளாம். கூத்தர் யாராவது குடமுழவு ஆடுவதைக் கேட்டால், என் கோவிந்தனின் ஆடலாக இருக்கும் என்று ஓடுகிறாளாம். குழலின் ஒலி எங்காவது கேட்டால், என் நாயகர் இசைக்கும் ஓசை என்று அப்படியே மயங்குகிறாளாம். இடைச்சியர் விற்பதற்குக் கொண்டுவரும் வெண்ணெயைக் கண்டால், அவர் உண்ட வெண்ணெய் இது என்கிறாளாம். துளசி மலரைக் கண்டால், நாராயணன் மாலை இது என்கிறாளாம். கருநிறமான பெரிய மேகங்களைக் கண்டால், கண்ணன் என்று சொல்லி மேலே ஏறுவதற்காகப் பறக்க முயல்கிறாளாம். பசுமந்தை செல்லக் கண்டால், அதன் நடுவே என் நாயகர் இருப்பார் என்று பின் செல்லுகிறாளாம்.
“சோர்ந்திருப்பாள். சுற்றிலும் நோக்குவாள். நெடுந்தொலைவு நீண்ட பார்வை பார்ப்பாள். வியர்வை கொள்வாள். கண்ணீர் தளும்பப் பெருமூச்சு விடுவாள். உடல் சோர்வாள். மறுபடியும், மறுபடியும் கண்ணா என்று சொல்வாள். பெருமானே வா என்று கூவுவாள். இப்படி மயங்கிய பெருங்காதல் கொண்ட என் பேதைப் பெண்ணுக்காக நான் என்ன செய்வேன்?” என்று தாய் வருந்துகிறாள்.
நம்மாழ்வாரின் காலத்தில் கல்வி நிரம்பிய புலவர்கள் வறுமையால் வாடிச் செல்வர்களை நாடிச் சென்றனர்; அவர்களின் புகழைப்பாடி, அவர்கள் தந்த சிறுபொருளைப் பெற்று மகிழ்ந்தனர். தங்கள் அருமையான கவிதைத் திறமையை இப்படிச் செல்வரின் பொருளுக்காக விற்றுவந்தது நம்மாழ்வாரின் உள்ளத்திற்கு வெறுப்பைத் தந்தது. நாட்டில் பலரும் அந்த வழக்கம் உடையவர்களாக இருந்தார்கள். அதை வெறுத்துச் சொன்னாலோ செல்வர்களுக்கு விரோதமாக இருந்தது. ஆனாலும் சொல்வதே கடமை என்று உணர்ந்தும், நம்மாழ்வார் அந்தப் புலவர்களுக்கு அறிவுரை கூறினார்; “என் நாவிலிருந்து பிறக்கும் இனிய கவிதையை யான் அவ்வாறு வேறு ஒருவர்க்காக - அவருடைய புகழைப் பாடுவதற்காக - கொடுக்க மாட்டேன். திருவேங்கட மலையில் உள்ள என் அப்பன் எம்பெருமான் இருக்கும்போது, அவன் புகழைப் பாடாமல் வேறு ஒருவர்க்கு என் கவிதைத் திறமையைப் பயன்படுத்தமாட்டேன்” என்றார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 127 | 128 | 129 | 130 | 131 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 129 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - என்கிறாளாம், கண்டால், தழுவி, நம்மாழ்வாரின், நாயகர், உடல், தந்த, இருக்கும்